திருச்சி, ஜன. 31- பெரியாரின் கொள்கை காரணமாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. அதனால் பெரியாரை இழிவுபடுத்தி பேச ஒருவரை நியமித் துள்ளார்கள் அவர்கள் பேச்சைக் கேட்டு அவரும் பெரியாரை இழிவுப் படுத்தி வருகிறார் என திருச்சியில் கே.என்.நேரு பேசுகையில் குறிப்பிட்டார்.
திருச்சியில் மொழிப்போர்த் தியாகிகள் நினைவு நாளை முன் னிட்டு தி.மு.க சார்பில் வீர வணக்க நாள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று (30.1.2025) கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவா கத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
திருச்சி சாஸ்திரி சாலையில் தொடங்கிய ஊர்வலம்தென்னூர் உழவர் சந்தை அருகே குழு மிக்கரை சாலையில் உள்ள கீழப்பழுவூர் சின்னசாமி மற்றும் விராலிமலை சண்முகம் ஆகியோரது நினைவிடங்களில் நிறைவடைந்தது.அங்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நடந்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
ஹிந்தித் திணிப்பு
தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்கப்பார்த்தார்கள். ஹிந்தி படித்தால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். ஆனால் இன்று ஹிந்தி தெரிந்த வட நாட்டினர் தமிழ்நாட்டிற்குதான் வேலைக்காக வருகிறார்கள். தமிழ்நாடு அரசு கடன் வாங்குவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார். தகுதி இருந்தால்தான் கடன் வாங்க முடியும். எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. அந்த அளவிற்குதான் கடன் வாங்குகிறோம். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் ரூ.10 ஆயிரம் கோடி அளவில் திருச்சிக்கு மட்டும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் என்ன திட்டங்கள் செய்தார்கள் என அ.தி.மு.க. வினர் கூறட்டும். திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் திட்டங்கள் செயல்படுத்துவதால் நிதி அதிகமாகிறது. மூன்று முறை பெரிய வெள்ளங்கள் வந்துள்ளது. அதற்கான நிவாரணப் பணிகளுக்கு முழுமையாக தமிழக அரசுதான் நிதி ஒதுக்கியது. ஒன்றிய அரசு நிவாரணநிதி வழங்குவதே இல்லை. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து அறிவித்த, அறிவிக்காத வாக்குறுதிகள் என 393 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
இந்தியாவில் மகளிருக்கான உரிமை தொகையை தமிழ்நாட்டில ்முதலமைச்சர் வழங் கினார்கள். அதனை கருநாடக, மஹா ராட்டிரா மாநிலங்கள் பின்பற்று கின்றன.
காலூன்ற முடியவில்லை
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாததற்கு காரணம் தந்தை பெரியார் தான். அவர்கள், பெரியாரை இழிவாக பேச வேண்டும் என ஒருவரிடம்கூறியுள்ளார்கள். அதனை கேட்டு அந்த நபர் பெரியாரை இழிவுப்படுத்தி பேசி வருகிறார். பெரியார் இல்லையென்றால் நமக்கெல்லாம் எந்த வாய்ப்பும் கிடைத்திருக் காது. மோசமான நிலையில்தான் நாம் இருந்திருப்போம். சினிமா விலிருந்து வந்த ஒருவர் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவுபோடுகிறார்.எந்தத் தியாகமும் செய்யாமல் முதலமைச்சர் கனவு காண்கிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.