அப்பிநாயக்கன்பட்டி செ.சிவராஜியின் “கி.வீரமணி” புதிய இல்ல அறிமுக விழா

Viduthalai
2 Min Read

கிருட்டினகிரி,.ஜன.30- கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றிய கழகச் செயலாளர் செ.சிவராஜ்-வசந்தமல்லி வாழ்விணையர்களால் அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் “கி.வீரமணி” இல்லம் என்று பெயர் சூட்டியுள்ள இல் லத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி 26.1.2025 அன்று பகல்12.00 மணியளவில் நடைபெற்றது.
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலை மையில் இல்ல அறிமுக விழா வெகு சிறப் பாக நடைபெற்றது.
மண்டல கழக மேனாள் தலைவர் பழ.வெங்கடாசலம், ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சீனிமுத்து இராசேசன், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ் அனைவரையும் வரவேற்றார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் ஊமை. செயராமன், கழக மாநில மகளிரணி பொருளாளர் அகிலா எழிலர சன் ஆகியோர் புதிய இல்லத்தினை திறந்து வைத்து தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் படங்களுக்கு மாலை அணிவித்து சிறப்பித்து சிவராஜியின் கொள்கை செயல்பாடுகளை எடுத்துக் கூறி கருத்துரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, அரூர் மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க.தலைவர் சா.இராசேந்திரன், திருப்பத்தூர் மாவட்ட கழகச் செயலாளர் பெ.கலைவாணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெ.ஆறுமுகம், கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, கிருட்டினகிரி மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், மருத்துவர் வெ.முகில்வண்ணன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் துணைத் தலைவர் வ.ஆறுமுகம் இணைப் புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊற்றங்கரை திமுக ஒன்றியச் செயலாளர் இரஜினி செல்வம், நகர பொறுப்பாளர் பா.தீபக், குப்புராஜ், பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் சித.அருள், சித.வீரமணி, வீ.சாந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் காரப்பட்டு ப.இரமேசு, தருமபுரி மாவட்ட மேனாள் தலைவர் வீ.சிவாஜி, ஊற்றங்கரை மகளிரணி வெ. அலகுமணி, முருகம்மாள், அரூர் மகளிரணி பெ.கல்பனா, கு.உமா, பிரேம்குமார், என்.டி.குமரேசன், அன்பழகன், கார்ப்பட்டு ந.கோகுல், திருப்பத்தூர் மாவட்ட கழக துணைத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன், கந்திலி ஒன்றியத் தலைவர் பெ.இரா. கனகராஜ், செயலாளர் நாகராசன், சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர் இராசேந்திரன், மாவட்ட ப.க.செயலாளர் கோ.திருப்பதி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் க. கற்பகவள்ளி, பெரியார் பிஞ்சுகள் க.இனியவன், க.உதயவன், இரா.கிருபாகரன், இரா.நவினேஷ், இரா.சமர்னா, கா.ஆ.நிறை தமிழ், சி.செம்மொழி, சி. இசைமொழி மற்றும் உற்றார் உறவினர்கள் உள்பட அனைத்து கட்சி பொறுப்பாளர்களும், தோழர்களும் வருகை தந்து சிறப்பித்தனர். நிறைவாக செ.வசந்தமல்லி நன்றி கூறினார்.
தமிழர் தலைவர் “கி.வீரமணி” புதிய இல்லத்தினை அறிமுகம் செய்து வைத்ததின் மகிழ்வாக செ.சிவராஜ்-வசந்தமல்லி வாழ்விணையர்கள் ஓர் ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ 2000-த்தினை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செய ராமனிடம் வழங்கினர். நிறைவாக அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கி மகிழ்ந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *