புதுடில்லி,ஜன.29- உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகள் அவ்வப்போது கூடி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் தொடர்பாக விவாதித்து தீர்வு கண்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 111ஆவது கூட்டம் இன்று (29.1.2025) நடக்க இருக்கிறது. இதைப்போல நாளை (30.1.2025) காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37ஆவது கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டங்களில் பங்கேற்கும்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கருநாடகம் மற்றும் கேரளா ஆகிய காவிரியோடு தொடர்புடைய 4 மாநிலங்களுக்கும் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் மற்றும் ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.