சேலம், ஜன. 26- சேலம் குறிஞ்சி மருத்துவமனை நிர்வாக இயக்குநரும், சிறந்த பகுத்தறிவாளருமான பிரபல எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ஜெயராமன் மறைவுற்றார். இன்று (26.1.2025) திராவிடர் கழகத்தின் சார்பில் பழநி புள்ளையண்ணன் தலைமையில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன், க.கிருட்டிணமூர்த்தி, ஓமலூர் சவுந்தரராசன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அன்னாரது உடல் சேலம் மோகன் குமார மங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற் கொடை அளிக்கப் பட்டது.
சேலம் டாக்டர் டி.ஜெயராமன் மறைவு கழகத் தோழர்கள் மரியாதை

Leave a Comment