கும்பமேளாவில் பல கூத்துகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இதில் சாட்டை அடி சாமியார் என்று ஒருவர் கும்பமேளாவில் போவோர் வருவோரை எல்லாம் சாட்டை மற்றும் பிரம்பால் வெளுத்து வாங்குகிறார்.
இவர் ரூத்ரபிரயாக் என்ற இடத்தில் 70 ஆண்டுகளாக தவமிருந்தவராம் – இவர் கையில் அடிவாங்கினால் புண்ணியம் என்று யாரோ புரளியைக் கிளப்பி விட இவர் இருக்கும் இடத்திற்குச் சென்று அடிவாங்குகின்றனர்.
வரும் கூட்டத்தைக் கண்டு வெறுத்துப் போன இவர் கையில் கிடைத்ததைக் கொண்டு அடிக்க ஆரம்பித்துவிட்டார். அடிவாங்கிய வலியோடு காணிக்கைகளைப் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.