குழந்தைகளின் கைகளில் பேனாவைக் கொடுங்கள் – அவர்களாகவே சிந்தித்து அவர்கள் போக்கில் எழுத விடுங்கள்.
சென்னையில் அஸ்தினாபுரம் அரசுபள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாங்களாகவே சிறுகதை தொகுப்பு நூல்களை எழுதி பள்ளியின் சார்பில் வெளியிட்டுள்ளனர்.
7ஆம் வகுப்பில் படிக்கும் ஆர் தேவி, ஒரு ஆல மரம் பற்றிய கதை எழுதுகிறார். தனது கதையில், ஒரு குழந்தை சாலை விரிவாக்கத்திற்காக மரத்தை அழிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது, ஏனெனில் அது பறவைகளை காக்கிறது, நிழல் அளிக்கிறது – புத்துணர்ச்சி தரும் காற்றை வழங்குகிறது என்று மரத்தின் பயனை அழகாக விவரிக்கிறார்.
அவரது கதை – அதிகாரிகள் மரத்தை வெட்டாமல் பாதுகாக்கிறார்கள் என்று முடிகிறது. அவர் மற்றும் அவரது பள்ளியின் 20 இளம் கதாசிரியர்கள் ‘‘ஒரு கிராமத்தில்’’ என்ற தலைப்பில் 32 பக்கம் கொண்ட கதை புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளனர், இதில் மாணவர்களின் 37 கதைகள் உள்ளன.
புத்தகத்தில் உள்ள சில கதைகள் ‘இரவு கனவு’, ‘கோடை விடுமுறைகள்’, ‘காடுகள்’, ‘சிகப்பு பலூன்கள், மற்றும் ‘நண்பர்கள்’ போன்றவை ஆகும். ‘இரவு கனவு’ என்ற கதையை எழுதிய மற்றொரு மாணவி எம். பிரவீனா, எதிர்காலத்தில் ஒரு மருத்துவமனையில் ரோபோக்களுடன் வேலை செய்வதை கற்பனை செய்கிறாள்.
“இந்த கதை என் முழு நாளைப் பற்றியது. நான் தொடர்ந்து எழுதத் திட்டமிட்டுள்ளேன்” என்று அவர் மேலும் கூறினார். அவர் முதலில் மருத்துவம் படிக்க விரும்பினாலும், இப்போது கணினி அறிவியல் படித்து அய்.டி.யில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவைக் கொண்டுள்ளார். மாணவர்கள் தங்கள் புத்தகத்தை ‘வடைசுட்ட பாட்டி’ கதை எழுதியவருக்கு அர்ப்பணித்துள்ளனர். மேலும் அரசுப் பள்ளிக் குழந்தைகள் மற்றும் அட்டைப்படத்தில் பள்ளியில் நுழைவாயிலில் பூத்திருக்கும் பூக்களையும் வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறும் போது “நாங்கள் 400-க்கும் மேற்பட்ட பிரதிகளை அச்சிட்டுள்ளோம், மற்றும் புத்தகங்களை நிகழ்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக வழங்குகிறோம்” என்று ஆசிரியர் சித்ரா கூறினார்.
பள்ளியில் கடந்த ஆண்டு குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதற்கான கோடைபயிற்சி முகாம் நடத்தப்பட்டது. “தவறுகளின்றி தமிழ் மொழியில் எழுத அவர்களுக்கு ஊக்கம் அளிப்பது தான் நோக்கம். இப்போது, எங்கள் பள்ளியில் மேலும் பல மாணவர்கள் அவர்களுடைய கதைகளை எழுதுவதற்காக முன் வருகின்றனர்” என்று அவர் கூடுதல் தகவல் அளித்தார்.
மாணவர்களின் இந்த முயற்சி, கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு உயர் தரப் பள்ளியின் அடித்தளத்தைத் தொடர்ந்து மேலும் பரவி வருகிறது, இது மாணவர்களின் எழுத்துகளை வெளியிடுவதில் முன்னணி அரசு பள்ளியாகும்.
“மாநில அரசின் இளம் வாசகர்களுக்கான வட்டம், குழந்தைகளுக்கான மாத இதழ் மற்றும் வாசகர் வட்டம் ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, முதலில் மாணவ கதாசிரியர்களின் புத்தகங்களை வெளியிடத் தொடங்கினோம். இதுவரை, எங்கள் பள்ளியில் மாணவர்களின் எழுத்துகளால் 5 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன” என்று பள்ளியின் ஆசிரியர் தாமோதரன் கூறினார்.
அவரது பள்ளியில் மாணவர் ஆசிரியர்கள், கடந்த கோடை விடுமுறையில், வாலிகண்டபுரம் அரசு உயர்நிலைபள்ளி மற்றும் அஸ்தினாபுரம் அரசு உயர் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித் தனர். வாலிகண்டபுரம் பள்ளி மாணவர்கள் ‘மூன்று பூனைகளின் நிறங்கள்’ எனப்படும் கதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளனர். இதுவும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிக் குழந்தைகள் எழுதிய கதைகளில் மூடநம்பிக்கையுள்ள, அறிவிற்கு ஒவ்வாத கதைகள் எதையும் அவர்கள் எழுதவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.