உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.31 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கோ ரூ.7 ஆயிரம் கோடி
புதுடில்லி, ஜன.12 வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை ஒன்றிய அரசு விடுவித் துள்ளது. அதன்படி அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.31,039.84 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.7,057.89 கோடியும் விடுவிக் கப்பட்டுள்ளது.
வரிப்பகர்வு தொகை
ஒன்றிய அரசு சார்பில் வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மூலதனச் செலவினங்களை விரைவாக மேற்கொள்ளவும், வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவிடவும் மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு ரூ.1,73,030 கோடி வரிப் பகிர்வாக வழங்கப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில் ரூ89,086 கோடியாக இருந்த இந்த வரிப்பகிர்வு என்பது இந்த மாதம் ரூ.1,73,030 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டுள்ள நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.3,1039.84, ராஜஸ் தான் மாநிலத்துக்கு ரூ.1,0426.78 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.13582.86 கோடி, மகாராட்டிராவுக்கு ரூ.10,930.31 கோடி, பீகாருக்கு ரூ.17,403.36 கோடி, என அள்ளிக் கொடுத்துள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.7057.89 கோடி, தெலங்கானாவுக்கு ரூ. 3637.09 கோடி, கருநாடகாவுக்கு ரூ.6310.40 கோடி, கேரளாவுக்கு ரூ.3330.83 கோடி, பஞ்சாப்புக்கு ரூ. 3126.65 என ஓரவஞ்சகத்துடன் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதர மாநிலங்களுக்கு
ஆந்திர பிரதேசத்துக்கு ரூ.7,002.52 கோடி, அருணாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.3,040.14 கோடி, அசாமுக்கு ரூ.5,412.38 கோடி, சத்தீஸ்கருக்கு ரூ.5,895.13 கோடி, கோவாவிற்கு ரூ.667.91 கோடி, குஜராத்துக்கு ரூ. 6,017.99 கோடி, அரியானாவுக்கு ரூ.1,891.22 கோடி, இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.1436.16 கோடி, ஜார்கண்ட்டுக்கு ரூ.5,722.10 கோடி வரிப் பகிர்வாக வழங்கப்பட்டுள்ளது.
மணிப்பூருக்கு ரூ. 1238.90 கோடி, மேகலா யாவுக்கு ரூ. 1327.13 கோடி, மிசோராமுக்கு ரூ.865.15 கோடி, நாகலாந்துக்கு ரூ. 984.54, ஒடிசாவுக்கு ரூ.7834.80 கோடி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிக்கிமிற்கு ரூ.671.35 கோடி, திரிபுராவுக்கு ரூ.1225.04, கோடி, உத்தராகண்ட்டுக்கு ரூ.1934.47 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.13017.06 கோடி என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.