ஏன் ஒரு சார்பு?
*கும்பகோணம் மாநகராட்சியில் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறிய ஆணையர்மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் ஜனவரி 27 இல் தெரிவிக்க ஆணை.
>> கோவில் குளங்களில், நிலங்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற நீதிமன்றம் இட்ட ஆணை வரவேற்கத்தக்கதே! அதேநேரம், அரசு நிலங்களை, பொது இடங்களை, அலுவலகங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கோவில்களை அகற்றக்கோரி உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பலமுறை ஆணைகள் இட்டும், இன்னும் அதைக் கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?