தெற்கு ஆசியாவிலேயே முதல் விருது பெற்ற தமிழர்

2 Min Read

அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக உளவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் டாக்டர் ராம் மகாலிங்கத்துக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஹெரால்ட் ஜான்சன் விருது கிடைத்துள்ளது.
1996 இல் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரையில் இந்தியாவில் இருந்து எவருமே பெறாத வேளையில் தமிழ்நாட்டுத் தமிழராகிய இவர் பெற்றிருப்பது பெரு மகிழ்ச்சியினை அளிக்கிறது. இந்தியா மட்டுமல்ல தெற்கு ஆசியாவிலேயே இவ்விருதினைப் பெறும் முதலாமவர் டாக்டர் ராம் மகாலிங்கம்தான்.
சமத்துவம் – சமூக நீதியை மய்யமாகக் கொண்டு பணியாற்றிவரும் பேராசிரியர் டாக்டர் ராம்.மகாலிங்கம் நிறவெறி – ஜாதிய மேலாதிக்கம் இரண்டுக்கும் இடையிலுள்ள நுட்பமான தொடர்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டு அதனைக் களையும் பணியினை மேற்கொண்டு வருவதற்காக இந்த விருது இவரைத் தேடி வந்திருக்கிறது.

பேராசான் மார்க்ஸ்..
தந்தை பெரியார்..
அண்ணல் அம்பேத்கர்
மூவரையும் பிதாமகராகக் கொண்ட
நமது பேராசிரியருக்கு இவ்விருது கிடைத்திருப்பது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் மற்றொரு தருணம்.
இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மகாலிங்கம் பிள்ளை – ராஜம்மாள் மகன் ஆவார். இவருடன் இரண்டு சகோதரர். ஒரு சகோதரி உள்ளனர். இவரது இளைய சகோதரர் பன்னீர்செல்வம் வங்கியில் பணியாற்றினாலும் சமூக சிந்தனையில் ஆர்வம் உள்ளவர் ஆவார்.
பேராசிரியர் ராம் மகாலிங்கம் மன்னார்குடி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவராவார். பள்ளிப் படிப்பை முடித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று மேற்படிப்பைத் தொடர அமெரிக்காவில் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு புத்தகங்கள் பல எழுதியுள்ளார். இவர் அமெரிக்கா சென்ற பொழுது நிற வேற்றுமையால் பல சங்கடங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து சாதாரண ஓட்டல் தொழிலாளியாக பணியாற்றி தற்போது பேராசிரியராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாட்டின் கடைநிலை ஊழியர்களான துப்புரவு தொழிலாளர்களின் மேம்பாட்டின் ஆய்விற்காக பிரான்ஸ் சென்று ஆய்வு நடத்தியவர் என்பது சிறப்பு தகவலாக இருக்கிறது.
எப்படியோ முயற்சியும் உழைப்பும் இருந்தால் வெற்றியடையலாம் என்பதற்கு பேராசிரியர் ராம் மகாலிங்கம் ஒரு அடையாளம்.
மட்டற்ற மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் தோழர் ராம் மகாலிங்கம்…!.
குறிப்பு: இப்பேராசிரியரின் பெரியார்பற்றிய கட்டுரை நாளை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *