திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியில் தாய் – சேய் நல கண்காணிப்பு மய்யம் திறப்பு

Viduthalai
1 Min Read

திருவள்ளூர், ஜன.5 திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 24 மணி நேர தாய், சேய் நல கண்காணிப்பு மய்ய திறப்பு விழா நேற்று (4.1.2025) நடந்தது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இம்மய்யத்தினை திறந்து கூறியதாவது:
மாவட்டத்தில் தற்போது 10,112 கர்ப்பிணி பெண்களில் 3,226 பேர் சிக்கல் உள்ளவர்களாக இருக்கின்றனர். 1,940 பேர் பிரசவித்த பெண்கள் உள்ளனர். இவர்களை தினமும் கண்காணிக்க, கர்ப்பிணியரின் அலைபேசி எண் வாயிலாக, மருத்துவ அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும், திடீர் அபாய அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்துவர். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சந்தேகம் மற்றும் உதவி பெற, 93848 14050, 93848 14049, 93848 14048, 93848 14047, 93848 14046 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி, சுகாதார இணை இயக்குநர் அம்பிகா, துணை இயக்குநர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *