வருமான வரி பிடித்த அறிக்கை பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை ஜன. 2 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மூன்று காலாண்டுகளுக்கான வருமான வரி பிடித்த அறிக்கையை ஜன.25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு, ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டுக்கான வருமான வரி பிடித்த அறிக்கையை ஏற்கெனவே தாக்கல் செய்திருக்க வேண்டும். அதேவேளையில், இதுவரை தாக்கல் செய்யாதவா்கள் டிச. 31-ஆம் தேதியுடன் முடிவடையும் மூன்றாவது காலாண்டையும் சோ்த்து ஜன.25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே, இது குறித்து தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தி வருமான வரி பிடித்த அறிக்கையை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் தாக்கல் செய்து அதற்கான அறிக்கையை, முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பம் பெற்று பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *