காந்தி குடும்பத்தினருக்கு வாக்களிக்கும் கேரளம் குட்டி பாகிஸ்தானாம்!

Viduthalai
2 Min Read

மகாராட்டிர அமைச்சரின் வீண் வம்புப் பேச்சு

மும்பை, ஜன.1 காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாக்களிக்கும் கேரளம் சிறிய பாகிஸ்தான் என்றும், தீவிரவாதிகளே காந்தி குடும்பத்தினருக்கு தொடா்ந்து வாக்களிப்பா் என்றும் மகாராஷ்டிர மாநில அமைச்சா் நிதீஷ் ராணே சா்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரியங்கா
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடா்ந்து, நிதீஷ் ராணே தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் திங்கள்கிழமை விளக்கமளித்தார்.
2024 மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு உள்ளிட்ட இரு தொகுதிகளில் மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வென்றதையடுத்து, வயநாட்டின் எம்.பி. பதவி யிலிருந்து விலகினார். இதைத் தொடா்ந்து, கடந்த மாத இறுதியில் அங்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் ராகுலின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி களமிறங்கி, அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இதுதொடா்பாக மகாராட்டிரத்தின் புணே மாவட்டத்தில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான நிதீஷ் ராணே பேசியது சா்ச்சையானது. இத னால் நிதீஷ் ராணே எதிர்க்கட்சிகளின் கடும் விமா்சனத்துக்குள்ளானார்.

ஹிந்துக்களின் தேசம்
இதையடுத்து, நிதீஷ் ராணே அளித்த விளக்கத்தில், ‘கேரளமும் நாட்டின் ஒரு பகுதியே ஆகும். ஆனால், எனது பேச்சில் கேரளத்தில் குறைந்து வரும் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறித்தே கவலை எழுப்பினேன். மதமாற்றங்களும், ‘லவ் ஜிஹாத்’-களும் அங்கு அதி கரித்துள்ளன. பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி, அதேபோன்ற சூழல் கேரளத்திலும் உருவானால் என்னவாகும் என்று சிந்திக்க வேண்டுமென்றே நான் பேசினேன். ஹிந்துக்களின் தேசம் ஹிந்துக்களின் தேச மாகவே நீடிக்க வேண் டும். ஹிந்துக்கள் அனைத்து வழிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும். களசூழல் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள சில உண்மைகளைப் பேசி னேன். எதிர்க்கட்சியான காங்கிரஸ் எனது கருத்தை தவறு என்று நிரூபிக்கலாம்’ என்றார்.
நிதீஷ் ராணேவுக்கு கண்டனம் தெரிவித்த மாநில காங்கிரஸின் தலைமை செய்தித் தொடா் பாளா் அதுல் லோந்தே, இவ்விவகாரத்தில் பாஜக வும் முதலமைச்சர் தேவேந் திர ஃபட்னவீஸும் விளக் கமளிக்க கோரினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *