2002 சிறந்த நாடாளுமன்றவாதி விருது, 2005 அமெரிக்க டைம் இதழின் உலகின் முதல் 100 செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் இடம், 1996 கவுரவ டாக்டர் பட்டம், டில்லி பல்கலை. 1993, 1994 சிறந்த நிதியமைச்சருக்கான ஆசியா மணி விருது, யூரோமணி விருது, 1987 பத்ம விபூஷண், 1956 கேம்பிரிட்ஜ் பல்கலை. ஆடம் ஸ்மித் பரிசு, 1955 சிறந்த மாணவருக்கான கேம்பிரிட்ஜில் ரைட்ஸ் விருது 14 கவுரவ டாக்டர் பட்டங்கள்.
மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் படித்த மன்மோகன் சிங்
சிறு வயதிலேயே தாயை இழந்த மன்மோகன் சிங், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். அவர் வசித்த காஹ் கிராமத்தில், மின்சாரம், பள்ளி இல்லை. இதனால், நீண்ட தூரத்தில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று படித்ததுடன், மண்ணெண்ணெய் விளக்கு ஒளியிலே படித்தார். ஏழ்மையிலும் கற்பதை மட்டும் நிறுத்தாத அவர், பேராசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின், பல உயரிய பதவிகளை வகித்தாலும் வாழ்க்கையில் எளிமையை கடைப்பிடித்தார்.