மேனாள் நீதிபதி குற்றச்சாட்டு இம்பால், டிச.26 மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் இனக் கலவரத்தை பின்னால் இருந்து சில சக்திகள் தூண்டி விடுகின்றன என அம்மாநிலத்தின் மேனாள் உயர் நீதி மன்ற நீதிபதி சிட்த தார்த் மிர்துல் விமர்சித்துள்ளார். எப்போதெல் லாம் அமைதியை கொண்டுவரும் சூழல் உருவாகிறதோ அப்போதெல்லாம் சில சக்திகள் புதிய வன்முறையை தூண்டி விடுகின்றன என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசிய தாவது: மணிப்பூரில் ஏற்பட்ட இனக் கல வரத்தால் 250 க்கும் அதிகமான மக்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். 60 ஆயி ரத்துக்கும் அதிகமான மக்கள் அவர் களின் வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். 60 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் மணிப்பூர் மாநிலத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும் அங்கு அமைதியை, சட்ட ஒழுங்கை நிலை நாட்ட முடியவில்லை. வேலையின்மை இந்த கலவரம் அதுவாக நிற்கும் வரை நாம் காத்திருந்தால் பாதுகாப்பதற்கு மணிப்பூரில் ஒன்றுமே இருக்காது. அம்மாநிலத்தில் வேலை யின்மை அதிகரித்துள்ளது. தீவிரமான பண வீக்கம் உள்ளது. நான் டில்லியில் இருந்து மணிப்பூர் செல்லும் போதெல் லாம் கையோடு காய்கறிகளை வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. பாதுகாப்பு பாாபஅந்தளவிற்கு மணிப்பூரில் பணவீக்கம் நிலவு கிறது. விமானத்தின் மூலமாக அங்கு பய ணிப்பது மட்டுமே பாதுகாப்பான வழி யாக உள்ளது. மணிப்பூரில் வேலை வாய்ப்புகள் என்பதே இல்லாமல் ஆகி வருகிறது என குறிப்பிட்டார்.
மணிப்பூரில், சில சக்திகள் வன்முறையை தூண்டி விடுகின்றன
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:மணிப்பூர்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books