20.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* உயர்கல்வி அமைப்பினை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உரிமை உள்ளது; ஆளுநர் பரிந்துரைக்க மட்டுமே முடியும்: அமைச்சர் கோவி.செழியன்.
*மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவை துணைத் தலைவர் நிராகரிப்பு.
* அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு – அமித்ஷா பதவி விலக கோரி சென்னையில் திமுகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.85.07 ஆக வீழ்ச்சி.
* அம்பேத்கர் குறித்து அமித்ஷா வின் சர்ச்சை பேச்சை ‘எக்ஸ்’ தளத்தில் நீக்க பாஜக அழுத்தம் தந்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு.
* வரும் கல்வி ஆண்டில் (2025-2026) இருந்து, தெலங்கானா மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடம், அரசு அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிராவில் ஆட்சிக்கு வந்துள்ள மகாயுதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு விஜயம்; அஜித் பவார் புறக்கணிப்பு. சிவாஜி மகாராஜ், பூலே, அம்பேத்கர் போன்றோரின் சித்தாந்தத்தை விட்டுக் கொடுக்கவில்லை என அஜித் பவார் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
* டில்லியில் ஆண்டு முழுவதும் அனைத்து பட்டாசுகளுக்கும் தடை, இன்று உத்தரவு: உச்ச நீதிமன்றத்தில் அரசு அறிவிப்பு.
* ‘பாஜக-ஆர்எஸ்எஸ் மனப்பான்மை அரசியல் சாசனத்துக்கும், அம்பேத்கருக்கும் எதிரானது, அமித்ஷா பதவி விலக வேண்டும் – ராகுல் கண்டிப்பு.
* அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டம் இல்லை என்றால் அமித் ஷா காயலான் கடை டீலராக (‘ஸ்கிராப் டீலராக’) இருந்திருப்பார் என முதலமைச்சர் சித்தராமையா காட்டம்.
* நிர்ணயிக்கப்பட்ட வரம்பின் படி அரசுப் பணிகளில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி களின் பிரதிநிதித்துவம் உள்ள தாக ஒன்றிய இணை அமைச்சர் மாநிலங்களவையில் தகவல்.
தி இந்து:
* உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்: லாலு பிரசாத்
தி டெலிகிராப்:
* கருநாடக அரசு நடத்திய விசாரணையில், தாழ்த்தப்பட்ட சமூக ஆசிரியர் ஒருவரை ஜாதி அடிப்படையிலான பாகுபாடு செய்த வழக்கில் அய்.அய்.எம். பெங்களூர் இயக்குநர் ரிஷிகேஷா டி. கிருஷ்ணன், டீன் தினேஷ் குமார் மற்றும் நான்கு ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு.
* பா.ஜ.க.வால் ஒருபோதும் அவமதிக்க முடியாத அம்பேத்கர் – ஹிந்துத்துவ சின்னமான சாவர்க்கரின் கருத்தியலுக்கு எதிராக அம்பேத்கர் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டுகிறது தலையங்க செய்தி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ராமர் கோவில் போன்ற பிரச்சினைகளை வேறு எங்கும் கிளப்பாதீர்கள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் திடீர் அறிவுரை
* அம்பேத்கர் குறித்து அமித் ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு, என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளான நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு சிந்திக்குமாறு கெஜ்ரிவால் கடிதம்.
.- குடந்தை கருணா