அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா பேசிய விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மும்பையில் பேசிய அவர், “அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு பாஜகவினரின் உண்மையான முகத்தையும், ஆணவத்தையும் காட்டுகிறது. அவர் மீது பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும்” என்றார்.