கோயில் பூட்டை உடைத்து
பஞ்சலோக சிலை, நகைகள் திருட்டு
திருப்பத்தூர், டிச.19- திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறாம் பள்ளி அடுத்த கொமுட்டியூர் பகுதியில் பொன்னியம்மன் கோயிலில் கடந்த 16.12.2024 அன்று இரவு பூஜையை முடித்து விட்டு கோயிலை பூட்டி விட்டுச் சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் கோயில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பஞ்சலோக சிலை, மூன்று அம்மன் தாலி செயின்கள் மற்றும் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் கோயில் நிர்வாகி கோயிலைத் திறக்க வந்த போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.