எங்கு மூடநம்பிக்கை அதிகமாக இருக்கிறதோ அங்கே தான் கருப்புச் சட்டையின் பணிகள் தீவிரமாகும்!
கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்ற எழுச்சிமிகு நிகழ்ச்சிகள்!
திருப்பத்தூர், டிச.17 ‘‘எங்கு மூட நம்பிக்கை அதிகமாக இருக்கிறதோ அங்கே தான் கருப்புச் சட்டையின் பணிகள் தீவிரமாகும்!’’ என்றார் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்.
14.12.2024 அன்று திருப்பத்தூரில் பல்வேறு நிகழ்ச்சி களில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று சிறப்பித்தார்.
14.12.2024 அன்று காலை தொடர் வண்டிமூலமாக காலை 10 மணிக்கு சோலையார்பேட்டை தொடர் வண்டி நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து பறை இசை முழங்க கழகப் பொதுச்செயலாளரை திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே. சி. எழிலரசன் தலைமையில் வரவேற்றனர். அங்கிருந்து கழகக் கொடி ஏந்தி தோழர்கள் பெரும் திரளாக இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக கழகப் பொதுச்செயலாளரை திருப்பத்தூர் நகருக்கு அழைத்து வந்தனர்.
மாவட்டக் கழக அலுவலகம் திறப்பு!
காலை 11 மணியளவில் திருப்பத்தூர் நகர் டபேதார் முத்துசாமி தெருவில் அமைக்கப்பட்ட மாவட்ட கழக அலுவலகத்தை கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், ‘‘தந்தை பெரியார் வாழ்க’’ என்ற முழக்கங்களோடு திறந்து வைத்தார். அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட சுயமரி யாதைச் சுடரொளிகள் நினைவு சுடரொளி படத்தை திறந்து வைத்து வீர வணக்கம் செலுத்தினார். அலுவலகத்தில் நாள்தோறும் ‘இன்று ஒரு தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை’யாக வெள்ளை பலகையில் ( White Board) முதன் முதலாக அதில், ‘‘மானமும், அறிவும் மனிதருக்கு அழகு’’ என்று எழுதி கையொப்பமிட்டார்.
மேலும், அலுவலகத்தில் மேற்கொள்ளவிருக்கின்ற பணிகள் குறித்த விளம்பரப் பதாகையைத் திறந்து வைத்தார்.
படிப்பகம் – புத்தக நிலையம் திறப்பு
அதில், தமிழ்நாடு தந்தை பெரியார் கட்டுமான அமைப்புசார தொழிலாளரணி உறுப்பினர் சேர்க்கை, சுயமரியாதைத் திருமண பதிவு தொடர்பு மய்யம், தந்தை பெரியார் படிப்பகம், தந்தை பெரியார் புத்தக நிலையம் மற்றும் ‘பேய், பில்லி, சூனியம், செய்வினை, ஜோதிடம்’ ஆகிய மூடநம்பிக்கைகள் குறித்த அறிவியல் மனநல ஆலோசனை மய்யம் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றைத் திறந்து வைத்த பிறகு விழா நிகழ்ச்சி தொடர்ந்தது.
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக அலுவலகம் திறப்பு விழாவிற்கு மாவட்ட தலைவர்
கே.சி. எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்
பெ. கலைவாணன் வரவேற்றார் .
மாவட்ட துணைத் தலைவர் சி.தமிழ்ச் செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.எ.சிற்றரசன், மாவட்ட ப.க. தலைவர் வெ. அன்பு, மாவட்ட இளை ஞரணி தலைவர் எஸ். சுரேஷ் குமார், மாவட்ட தொழிலா ளரணி தலைவர் இரா. பன்னீர், மாவட்டச் செயலாளர் தொழிலாளரணி கே. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு. சேகர், தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா எழிலரசன், கழகப் பேச்சாளர் பெரியார் செல்வம், விடுதலை வாசகர் மாவட்டத் தலைவர் எம்.ஞானப் பிரகாசம், விடுதலை வாசகர் வட்டம் மாவட்ட செயலாளர் வா. புரட்சி, விடுதலை வாசகர் அமைப்பாளர் வெ. குமர வேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்து சிறப்பித்தனர். மூன்றாம் தலைமுறை கழக கொள்கை வாரிசு சி. இன்பா ‘‘தொண்டு செய்து பழுத்த பழம்’’ பாடலை பாடினார்.
கழகப் பொதுச்செயலாளர் உரை
இவ்விழாவில் கழகப் பொதுச்செயலாளர் உரையில், தமிழ்நாட்டில் இதுவரை 24 கழக அலுவலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, இது 25 ஆவது அலுவலகம் என்பது சிறப்பு என்றார். இந்த அலுவலகத்திற்கு இடம் வழங்கிய மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் அவர்களுக்கும், அவர் வாழ்விணையர் மாவட்ட மகளிரணி தலைவர்
இரா.கற்பகவல்லி மற்றும் இந்தச் செயலுக்கு காரணமாக இருந்த மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் ஆகியோருக்குப் பாராட்டுகள் என்றும், இத்தகைய எண்ணம் வருவது தந்தை பெரியார் தொண்டர்களுக்கு மட்டும்தான் சாத்தியம். தந்தை பெரியார் அவர்கள் தன் சொத்து முழுவதும் இயக்கத்திற்கு வழங்கியவர். அவருடைய தோழர்கள் அதே தியாக உணர்வுடன் இருக்கிறார்கள் என்றார்.
இந்த அலுவலகத்தில் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து உரையாற்றுகையில், தந்தை பெரியார் கட்டுமான தொழிலாளரணி உறுப்பினர்கள் சேர்க்கை இந்த அலுவலகத்தில் இலவசமாக பதிவு செய்து உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்ற இச்செயல் பாராட்டுக்குரியது என்றும், முக்கிய பணியாக குறிப்பிட்டிருப்பது ‘‘பேய், பில்லி, சூனியம், செய்வினை, ஜோதிடம்’’ போன்ற மூட நம்பிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என்பது மிகச்சிறந்த பணி என்றும், இந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் மூட நம்பிக்கைகள் அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டார்கள். எங்கு மூட நம்பிக்கை அதிகமாக இருக்குமோ அங்கே தான் கருப்புச் சட்டையின் பணிகள் தீவிரமாகும் என்ப தற்கு இந்த அலுவலகம் ஒரு உதாரணம் என்றார்.
இவ்விழாவில் சோலையார்பேட்டை காப்பாளர் நரசிம்மன் ஓராண்டு ‘விடுதலை’ சந்தா விற்கான தொகை இரண்டாயிரம் ரூபாயினை பொதுச்செயலாளரிடம் வழங்கினார். மேலும் பெரியார் உலகத்திற்கு பலர் நிதியை வழங்கினார்கள்.
நகர தலைவர் காளிதாஸ் நன்றி தெரிவித்தார்.
கலந்துரையாடல் கூட்டம்
இதைத் தொடர்ந்து பகல் 12 மணியளவில் ஆனந்தன் – சாந்தி திருமண மண்டபத்தில், மண்டல தந்தை பெரியார் கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளரணி கலந்துரையாடல், மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் பெ. கலை வாணன் வரவேற்றார்.வேலூர் மாவட்ட தலைவர் வி. இ.சிவக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கோ.திராவிடமணி, தருமபுரி மாவட்ட தலைவர்
கு. சரவணன், ஓசூர் மாவட்ட தலைவர் சு. வனவேந்தன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முரளி, இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சு. லோகநாதன், இராணிப்பேட்டை தொழிலாளரணி, ஞானப்பிரகாசம் அரூர் மாவட்ட தலைவர் அ. தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.எ.சிற்றரசன், மாவட்ட துணைத் தலைவர் சி.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வெ. அன்பு, மாவட்ட தலைவர் தொழிலாளரணி கே.மோகன், மாவட்ட செயலாளர்
இரா.பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்து கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் தொழிலாளரணி மாநிலச் செயலாளர் திருச்சி மு.சேகர், தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், கழகப் பேச்சாளர் பெரியார்செல்வன், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா எழிலரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
உறுப்பினர் சேர்க்கை
இந்தக் கலந்துரையாடலில் கழப் பொதுச்செயலாளர் உரையாற்றியபோது, இங்கே தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூரைச் சார்ந்த தந்தை பெரியார் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளரணி தலைவர், செயலாளர்கள் வருகை தந்து உள்ளீர்கள். உறுப்பினர் சேர்க்கையை சிறப்பாக செய்து வருகிறீர்கள், இதை செய்யாத மாவட்டங்கள் தொழிலாளர்களுக்கு ஏராளமான நன்மைகள் இதில் உள்ளதை எடுத்துச் சொல்லி உறுப்பினர்களைச் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆசிரியர் அவர்களின் மிகப்பெரிய கனவான பெரியார் உலகத்திற்கு நிதியை திரட்டி தருமாறும், டிசம்பர் 28 , 29 இல் திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கூட்டமைப்பு சங்கங்களின் மாநாட்டிற்கு தங்கள் பெயரை பதிவு செய்யுமாறும், மாநாட்டிற்கு நிதியைத் திரட்டி தருமாறும் கேட்டுக் கொண்டார்.
கழப் பொதுச்செயலாளரிடம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி. தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வெ.அன்பு ஆகியோர் பகுத்தறிவாளர் கூட்டமைப்பு சங்கங்களின் மாநாட்டிற்கு திருப்பத்தூர் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ரூ. 10,000 வழங்கினர். அதை மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணனிடம் ஒப்படைத்தார்.
தீர்மானம்
மாவட்ட கமிட்டியின் சார்பில் தீர்மானங்களை மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் வாசித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட காப்பாளர் கே.கே.சி.கமலம்மா ளின் சகோதரர் மங்கலப்பள்ளி சுயமரியாதைச் சுட ரொளி எம்.கே.ராமன் 23.11.2024 அன்று இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவிற்கும், தலைவர் தந்தை பெரியாரின் குருதி வழிப்பேரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவிற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் சமூகத் தொண்டுக்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
முதல் மனித உரிமைப் போராளி
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளுக்கு 92 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை இக்கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. கேரள மாநிலம் வைக்கத்தில், இந்தியாவின் முதல் மனித உரிமை போராளி தந்தை பெரியார் 1924 இல் போராட்டம் நடத்தி சிறை சென்று வெற்றி கண்டார். இவ் வெற்றியின் நூற்றாண்டு விழாவை ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களோடு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களையும் அழைத்து நினைவிடம் விழா கண்ட பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
திராவிடர் கழகம் சார்பில் புதிதாக தொழில் தொடங்க உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்கும் விதமாக தொழில் முனைவோர் ஆலோசனை அமைப்பை ஒன்று உருவாக்க வேண்டும் என்று தலைமையை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க தலைமையை இக்கூட்டம் கேட்டுக் கொள்கி றது. இதற்கான பட்டியல் பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு காப்பீட்டினை தொழிலாளரணி சார்பில் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.புதிதாக துவங்கப்பட்டுள்ள தொழிலாளரணி அலுவலகத்தில் தொழிலாளர்களுக்கு இலவச சேவை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது, மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாநில தொழிலாளரணி கழக அலுவலகத்திற்கு ஒரு கணினி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பங்கேற்றோர்
இக் கலந்துரையாடல் பங்கேற்ற கழக மண்டல வாரியான பொறுப்பாளர்கள்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன், கிருட்டினகிரி மகளிரணி தலைவர் மத்தூர் எம்.இந்திராகாந்தி, வேலூர் மாவட்ட காப்பாளர் வி. சடகோபன், கவிஞர் ந.தேன்மொழி, மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் பொன்முடி, கிருட்டினகிரி மாவட்ட தொழிலாளரணி தலைவர் வெங்கடாசலம், வாணியம்பாடி நகர தலைவர் அன்புச்சேரன், ஆம்பூர் நகர தலைவர் இரவி, ஆம்பூர் நகரச் செயலாளர் இளங்கோ, மா.பன்னீர்செல்வம் ஆம்பூர், சூர்யா ஆம்பூர்,
சி.விஸ்வநாதன், மாதனூர் ஒன்றிய தலைவர்
எம். வெற்றிக் கொண்டார். ஆம்பூர் ஒன்றியச் செயலாளர்
சி. வெங்கடேசன், மாவட்ட மகளிரணி தலைவர் கற்பகவல்லி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் நா.சுப்புலட்சுமி, நகர தலைவர் காளிதாஸ், சோலை யார்பேட்டை காப்பாளர் அ.நரசிம்மன், மாவட்ட இளைஞரணி தலைவர் சி. சிற்றரசன், நகர இளைஞரணி அமைப்பாளர் கா. நிரஞ்சன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சி. சபரிதா, போச்சம்பள்ளி மகளிரணி ஜான்சி ராணி, கந்திலி ஒன்றியத் தலைவர் பெ.ரா.கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் இரா. நாகராசன், சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர் கொ. ராஜேந்திரன், மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர் கவிஞர் சோலைப்பிரியன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோ. திருப்பதி, வேலூர் க. சையத் அலீம், ஜீ. அரவிந்த் காக்கணாம்பாளையம், கே.ஆனந்தன் காக்கங்கரை, ஆர்.தனஞ்செயன், மாவட்ட துணைச் செயலாளர் தங்க அசோகன், வேப்ப நத்தம் அரூர் கல்பனா, அரூர் பெ. உமா, அரூர் வ. நடராசன், ஆர். ஜெபமணி, இலக்கிநாயக்கன்பட்டி கிளை தலைவர் சரவணன், இலக்கிநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர் சி.லட்சுமணன், விடுதலை வாசகர் வட்டம் பெருமாள் சாமி, காக்கங்கரை ஒன்றிய தலைவர் சி. சந்தோஷ், மத்தூர் மா. ரமேஷ், அரூர் இளைஞரணி ச. சஞ்சிவன், ஜி.கார்த்திகா, டி.தென்னவன், பி.வள்ளுவன், ஜே.பி.சத்தியவன், வி.தமிழ்வாணன், வி.சசிகலா, ப. சாருமதி, வ.அன்பழகி, மு. சூர்யா, மு. ஜெயரட்சகன், எம்.சூர்ய பிரகாஷ், ஊமை காந்தி, ஆகியோர் பங்கேற்றனர். நகர செயலாளர் சித்தார்த்தன் நன்றியுரை யாற்றினார்.
வருகை புரிந்த தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.