பீகார் தேர்வு வினாத்தாள் கசிவில் அரசுக்கு தொடர்பு தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

2 Min Read

பாட்னா, டிச. 15- பீகாரில் அரசுப் பணிக்கான தோ்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து மவுனம் காப்பதாக முதலமைச்சர் நிதீஷ் குமாரை விமா்சித்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ், ‘இதில் மாநில அரசின் தொடா்புள்ளது’ என்று குற்றஞ்சாட்டினார்.

பீகார் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (பிஎஸ்சி) 70ஆவது ஒருங்கிணைந்த போட்டித் தோ்வு (முதல்நிலை தோ்வு) 13.12.2024 அன்று நடைபெற்றது. இதில் தோ்வு தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பாகவே பாட் னாவில் உள்ள தோ்வு மய்யத்தில் வினாத்தாள் கசிந்ததாக செய்தி பரவியது. இதையடுத்து, தோ்வு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 300 முதல் 400 மாணவா்கள், தோ்வைப் புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தோ்வு மய்த்தில் கூடுதல் தோ்வு கண்காணிப்பாளரான ராம் இக்பால் சிங் மாரடைப்பால் உயிரிழந்ததார். மாணவி ஒருவா் மயங்கி விழுந்தார். இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியா், தோ்வு மையத்துக்கு வெளியே கூடியி ருந்த தோ்வா்களில் ஒருவரை அறைந் தார். இந்த காணொலி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பீகார் அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் பார்மா் ரவி மனுபாய் கூறுகையில், ‘தோ்வா்கள் வினாத் தாள்களுடன் தோ்வு அறையை விட்டு வெளியேறி, வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறுகின்றனா். அவா்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்’ என தெரிவித்தார். இந்நிலையில், இது குறித்து மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவா் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

வினாத்தாள் கசிவு இல்லாமல் தோ்வுகளை நடத்த மாநில அரசு தவறிவிட்டது. இது 10, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள், காவல்துறை ஆள்சோ்ப்பு மற்றும் பீகார் பிஎஸ்சி தோ்வுகளையும் பாதிக்கிறது. வினாத்தாள் கசிவுகளில் மாநில அரசுக்கு தொடா்புள்ளது. அதனால் தான், முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர்கள் மவுனம் காத்து வருகின்றனா். 2025-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் இந்த நிலை மாறும் என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *