புதுடில்லி, டிச.14 இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் எந்த முயற்சியாக இருந்தாலும், அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகள் வரவேற்கத்தக்கது என்றும் சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுடன் சஞ்சய் ரவுத் பேசியதாவது,
மாறுபட்ட கருத்து
”எங்கள் கூட்டணியில் உள்ள சில கட்சியினருக்கு மாறுபட்ட கருத்துகள் உண்டு. திரிணமூல் காங்கிரசோ, லாலு பிரசாத் யாதவோ, அகிலேஷ் யாதவோ யாராக இருந்தாலும் இந்தியா கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கூறலாம். நாம் அனைவரும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளோம். யாரேனும் கூட்டணி தொடர்பாக புதிதாக கூறினாலோ அல்லது கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என விரும்பினாலோ, அதனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.இது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க வேண்டும். அவர்கள் (காங்கிரஸ்) கருத்துகள் மூலம் இந்த விவகாரம் முன்னோக்கி நகரும்.ராகுல் காந்தியின் தலைமையில் யாரும் குறை கூறவில்லை. யாரும் கேள்வி எழுப்பவில்லை. அவர் எங்கள் அனைவருக்குமான தலைவர்” என சஞ்சய் ரெளத் குறிப்பிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிக்கு வரவேற்பு சஞ்சய் ரவுத் கருத்து!
Leave a Comment