13.12.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதலை ஒன்றிய அமைச்சரவை வழங்கியது; அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கலாக வாய்ப்பு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்து சுதந்திரத்தை மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தொடர்ந்து நசுக்குவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.
* எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கூறியதையடுத்து, அமைச்சருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சகரிகோ கோஸ் சிறப்புரிமை தீர்மானம் தாக்கீது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிராவில் மஹாயுதி அரசாங்கத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சிக்கல்; ஏக் நாத் ஷிண்டே டில்லி பயணம் ரத்து. சமாதானப்படுத்த பாஜகவின் பவான்குலே சந்திப்பு.
* “அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மூலம் தங்கள் வழியை புல்டோசர் ஆட்சி செய்துவிட்டது” என மம்தா கண்டனம்.
தி இந்து:
* 2020 ஹத்ராஸ் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த ராகுல், நீதிக்காக போராடுவதாக உறுதி
*மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மாணவர்களுக்கு அவர்களின் வளாகங்களில் சமத்துவம், சகோதரத் துவம் மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அரசமைப்பு கொள்கைகளை புகுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதை உறுதி செய்வதில் உத்தரப்பிரதேச அரசின் “மவுனம்” குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
* ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், தனியார் வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 75 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதித்தது.
தி டெலிகிராப்:
* மசூதி தொடர்பான வழக்குகள் புதிய மனுக்களை விசாரிக்க கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை.
.– குடந்தை கருணா