12.12.2024 அன்று கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெறவிருக்கும், தந்தை பெரியார் பங்கேற்று வெற்றி பெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா – தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழா ஆகிய விழாக்களில் பங்கேற்க வரும் கழகக் கொள்கைக் குடும்பத்தினர், அங்கே மிகவும் கட்டுப்பாடு காத்து, விழா தொடங்குமுன் உரிய நேரத்தில் அமர்ந்து, விழா முடிந்து, முக்கியஸ்தர்கள், ஏற்பாட்டாளர்கள் வெளியேறுவதற்கு நன்கு ஒத்துழைப்புத் தந்து, சிறப்புடன் விழா மாட்சிக்குக் காரணியாக இருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பயணத்திலும் கட்டுப்பாடு காத்திடவும், உடல்நலம் பேணவும் வேண்டுகிறோம்!
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்