கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.7.2023
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளை யாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் பன்னாட்டு போட்டி களுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவ தால், அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாட்டில் பயிற்சி மேற்கொள்ளலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
* ம.பி.யில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கமல் நாத் அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு பேருந்துப் பயணம் இலவசம் என முதலமைச்சர் பூபேஷ் பாகேல் வாக்குறுதி
தி இந்து:
* மணிப்பூர் வன்முறை இந்தியாவின் கூட்டாட்சி, பன்மைத்துவத்தின் மீதான தாக்குதலைக் குறிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதா ராம் யெச்சூரி கண்டனம்.
தி டெலிகிராப்:
* மணிப்பூர் நெருக்கடியை முன்னிலைப்படுத்தி பாஜகவுக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்க திரிணா முல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது
* வடகிழக்கு மாநிலத்தில் குக்கி சகோதரர்கள் எவ் வாறு குறி வைக்கப்படுகிறார்கள் என்பதை வங்காளத்தில் உள்ள பழங்குடியினருக்கு தெரிவிக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
* டில்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசரச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மாநிலங்கள வையில் தாக்கல் செய்ய மோடி அரசை அனுமதிக்க வேண்டாம் என ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அமைதியான வடகிழக்கு மாநிலத்தை கலவர பூமியாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற எண்ணம் கொண்டவர்களும் எழ வேண்டும் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து.
– குடந்தை கருணா