சென்னை, டிச.6- ‘பெஞ்சல்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 150 டன் அரிசியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
‘பெஞ்சல்’ புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணா மலை, கடலூர் ஆகிய மாவட் டங்கள் கடும் பாதிப்பை சந்தித் துள்ளன. இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள் ளார். தமிழ்நாடு அரசு சார்பில் மீட்பு மற்றும் நிவாரண பணி கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அரசு நிவாரண உதவிகள் ஒருபுறம் இருக்க. புயலால் பாதிக்கப் பட்ட இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்க ளுக்கு தி.மு.க. சார்பிலும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும், நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
தி.மு.க.சார்பில் நிவாரணம்
இதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டு விழுப்புரம், திருவண் ணாமலை, கடலூர் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை அனுப்பி வைத்தார்.
இந்த உணவுப் பொட்டலங்கள் விக்கிரவாண்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 100 டன் அரிசியை அனுப்பி வைத்தார்.
முதலமைச்சர் அனுப்பி வைத்தார்
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் மா.சுப் பிரமணியன் 150 டன் அரிசியை ஏற்பாடு செய்திருந்தார். இந்த அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு எடுத்து வரப்பட்டது. இந்த லாரிகளை புயல் பாதித்த மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.12.2024) கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
அப்போது தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பி னர்கள் தாயகம்கவி, பிரபாகர ராஜா, துணை மேயர் மகேஷ்குமார் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.