சிறீநகா், டிச.4 ‘நாட்டில் மத வன்முறையைத் தூண்டும் செயல்களை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும். முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினார். ஜம்மு-காஷ்மீரின் சிறீநகரில் செய்தியாளா்களிடம் 2.12.2024 அன்று அவா் மேலும் கூறியதாவது:
சம்பல் (மசூதி ஆய்வின்போது) வன்முறை போன்ற நிகழ்வுகள் ஏற் படக் கூடாது. இந்தியாவில் உள்ள 24 கோடி முஸ்லிம்களை எங்கே அனுப்பி வைப்பீா்கள். அவா்களை கடலில் வீசிவிட முடியாது. எனவே, வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். அதைத்தான் அரசமைப்புச் சட்டமும் கூறுகிறது. அரசமைப்புச் சட் டத்தை வைத்து விளையாடக் கூடாது.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் பண்டிட் டுகள் மீண்டும் குடியேறுவதை யாரும் தடுக்கவில்லை. அவா்கள் காஷ்மீா் திரும் பவே அனைத்து அரசியல் கட்சிகளும் கூறுகின்றன. ஆனால், இறுதி முடிவை பண்டிட்டுகள்தான் எடுக்க வேண்டும். அவா்களை மனமார வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.
பயங்கரவாதிகளுடன் தொடா்பு வைத்திருந்ததாகக் கூறி இரு அரசு ஊழியா்களை ஜம்மு-காஷ்மீா் துணை நிலை ஆளுநா் அண்மையில் பணி நீக்கம் செய்தார். இந்த விடயம் தொடா் பாக யூனியன் பிரதேச அரசு ஆய்வு செய்து வருகிறது.
இஸ்ரேல்-லெபனான் இடையிலான அமைதி ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் காசா, சிரியா, ஈரானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேலும், அமெரிக்காவும் நிறுத்த வேண்டும். அய்.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதங்கள் பெரும்பாலும் இஸ்ரேலுக்கு ஆதர வாகவே உள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்றார்.