தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

viduthalai
4 Min Read

சென்னை, டிச. 2- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2024) அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், கட்சித் தலைவர்கள், கழகத் தோழர்கள் திரளாக நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாகிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2024) திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை நாளாக நாடெங்கிலும் குருதிக்கொடை, மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முதலமைச்சர் நேரில் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2024) காலை 8.45 மணியளவில் சென்னை அடையாறில் உள்ள தமிழர் தலைவர் இல்லத்திற்கு நேரில் வந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்து, பிரேம் செய்யப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நிழற்படம் மற்றும் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது திருமதி மோகனா அம்மையார், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திருமதி சுதா அன்புராஜ், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்து வாழ்த்து தெரிவித்தனர்.
பெரியார் திடலில்…
தமிழர் தலைவர் அவர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்தவுடன் கழகத் தோழர்கள் பெருந்திரளாக கூடி ஒலி முழக்கமிட்டு வாழ்த்தி வரவேற்றனர்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் – சி.வெற்றிச்செல்வி இணையர் கழகத் தலைவருக்கு நிதி அளித்து வாழ்த்து தெரிவித்தனர். பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். எஸ்.எல்லப்பன், பி.சரவணன், ஆர்.முருகன், தமிழ்க் கடல் (திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்), உரத்தநாடு வினோத், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டத் தலைவர் சோ.முருகேசன் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், வழக்குரைஞர்கள் சென்னியப்பன், துரை.அருண் மற்றும் சேத்பட் நாகராசன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், சி.காமராஜ், பெரியார் செல்வி, பெரியார் திடல் மேலாளர் ப.சீத்தாராமன், விடுதலை அச்சக பிரிவு மேலாளர் சரவணன், திராவிடன் நிதி பொது மேலாளர் அருள்செல்வன் உள்ளிட்ட விடுதலை செய்திப் பிரிவு, பெரியார் திடல் பணித் தோழர்கள் அனைவரும் தமிழர் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டப் பேரவை மேனாள் செயலாளர் மா.செல்வராஜ், பேராசிரியர் தேவதாஸ், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா.பரஞ்சோதி, மணவழகர் மன்றம் கருணாநிதி, டாக்டர் மீனாம்பாள், இரா.சாமிநாதன், ஆடிட்டர் இராமச்சந்திரன், கவிஞர் புதிய குரல் ஓவியா, பத்திரிகையாளர் லெனின். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, நடராஜன், சந்திரன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அமைச்சர் பெருமக்கள் வாழ்த்து!
தமிழ்நாடு அரசின் நீர் மேலாண்மைத் துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், அமைப்பு செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் சிற்றரசு, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மேனாள் உதவியாளர் நித்தியானந்தம், மேனாள் ஒன்றிய இணையமைச்சர் வேங்கடபதி, நீதியரசர் ஏ.கே.ராஜன், வழக்குரைஞர் குணராஜ், விழிகள் வேணுகோபால், புலவர் வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், சட்டமன்ற உறுப்பினர் அசன் முகமது, மேனாள் துணைவேந்தர்கள் சாதிக், ஜெகதீசன், மேனாள் திட்டக்குழு தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன், தி.முக. சட்டமன்ற உறுப்பினர்கள் தஞ்சை நீலமேகம், அண்ணாதுரை மற்றும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், வா.மு.சே.திருவள்ளுவன், அவ்வை அருள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு மற்றும் கு.செல்வம், பாவரசு, மாடசாமி மற்றும் திரளான பல்வேறு கட்சி தோழர்கள் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழர் தலைவருக்கு
தொலைப்பேசி மூலம்…
அமைச்சர் க.பொன்முடி, இனமுரசு சத்யராஜ், கவிஞர் வைரமுத்து, வைகோ, துரை வைகோ, ம.தி.க. தலைவர் அண்ணாமலை, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், சைதை துரைசாமி, யுஎஸ்எஸ்ஆர் நடராசன், டாக்டர் சரோஜா பழனிப்பன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *