ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.2 கடந்த ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்திய அளவில் இரட்டிப்பாகியுள்ளதாக ஒன்றிய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச் சா் மன்சுக் மாண்டவியா தெரி வித்துள்ளார்.
இது தொடா்பாக மாநிலங் களவையில் திமுக உறுப்பினா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சா் மன்சுக் மாண்டவியா அளித்துள்ள பதில் வருமாறு:

‘2017-2018 முதல் ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் மூலம் ஆண்டுக்கான தொழி லாளா் சக்தி தொடா்பான கணக்கெடுப்பு ஜூலை முதல் ஜூன் வரையிலான காலத்தை கணக்கிட்டு எடுக்கப்படுகிறது. அந்தத் தரவுகளின்படி 2017-2018 ஆண்டில் 22% ஆக இருந்த வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 2023-2024இல் 40.3% ஆகியுள்ளது. கட்டாய வேலைக்கு உட்படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை 2017-2018இல் 22.3% ஆக இருந்தது. அது 2023-2024இல் 41.7% ஆகியுள்ளது. 2017-2018இல் 5.6% ஆக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2023-2024இல் 3.2% ஆக குறைந் துள்ளது. 2017-2018இல் 34.5 ஆக இருந்த முதுகலை மேல்படிப்பு முடித்த பெண்களின் சதவீதம் 2023-2024இல் 39.6 சதவீதம் ஆகி யுள்ளது என்று அமைச்சா் கூறியுள்ளார்.

இதைத்தொடா்ந்து, இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்க ஒன்றிய அரசு அறிவித்துள்ள திட்டங்கள், அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடா்பான விவரத்தையும் அமைச்சா் தனது பதிலில் விவரித்துள்ளார். வேலைக்கு செல்லும் பெண்கள் தொடா்பான நிகழாண்டு சதவீத பட்டியலில் சிக்கிம் (66.8), மேகாலயா (65.9), அருணாசலப்பிரதேசம் (62.4) ஹிமாசல பிரதேசம் (62.3) ஆகிய மாநிலங்களில் பெண்கள் அதிகம் போ் வேலைக்கு செல்பவா்களாக இருப்பது அமைச்சரின் பதில் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த சதவீதம் 2021-2022இல் 39.1, 2022-2023இல் 38.6, 2023-2024இல் 41.5 ஆக பதிவாகியுள்ளது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *