மும்பை, நவ.29 தற்போது பணப்பரிமாற்றத்தில் மிக முக்கியத்துவம் பெறும் ரூபாய் நோட்டுகளில் ரூ.500தான் முன்னிலையில் உள்ளது. ஆனால், இதில்தான் அதிக கள்ளநோட்டுகளும் புழக்கத்தில் விடப்படுகிறதாம். அதாவது 2018 – 19ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ரூ.1.09 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.500 கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கடந்த 2022-23ஆம் ஆண்டில் ரூ.4.55 லட்சம் கோடி நோட்டுகளாக அதிகரித்திருந்தது. அடுத்த ஆண்டில் குறைந்திருந்தது.
புதிய 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து, படிப்படியாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள் அதிகரித்திருப்பதும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், கண்டுபிடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை நான்கு மடங்காகியிருப்பதும் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.