27.11.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜாதிவாரி சர்வே 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன; சமூக நீதியின் முக்கிய மைல்கல் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவதற்காக காங்கிரசார் இந்திய அளவில் ஒற்றுமை பயணம் நடத்த வேண்டும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் வங்கதேச காவல்துறையினர் இஸ்கான் அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* பிஜேபியின் கேபினட் ரோல் வாய்ப்பை நிராகரித்த மேனாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மஹாயுதி கன்வீனர் பதவிக்கு விண்ணப்பம்.
தி டெலிகிராப்:
* மதிய உணவுத் திட்டம்; தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஒன்றிய அரசு பங்கு எதுவும் கிடையாது. மா நிலங்களே சுமையை ஏற்க வேண்டும் என ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சிங் கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பாஜக ஆளும் ஒடிசாவில் சட்டமன்றத்திற்குள் காட்சிப்படுத்தப்பட்ட அரசமைப்பின் முகப்புரையில் “சோசலிஸ்ட்” மற்றும் “மதச்சார்பற்ற” வார்த்தைகள் விடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு குளிர்கால கூட்டத் தொடரின் தொடக்க நாளான நேற்று (26.11.2024) பிஜேடி மற்றும் காங்கிரஸ் அவற்றை மீட்டெடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment