உறுதிமிக்க சித்தாந்த நெம்புகோல்!

2 Min Read

– தோழர் சி.மகேந்திரன் 

(தேசிய நிருவாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

அரசியல்

கோலாலம்பூர்  11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்,  ஆசிரியர் வீரமணி அவர்களின் உரை என்னை மிகவும் ஈர்த்தது. 

‘தந்தை பெரியார்  தமிழுக்காக என் னென்ன செய்தார்?’   தனக்கு சரியெனப்பட்ட அனுபவ அறிவில், தமிழின் வளர்ச்சியைத் தடுக்கும் குறை பாடுகளை தைரியமாகவும்,  தெளிவாகவும் எவ்வா றெல்லாம் எதிர் காலத்தின் தேவையறிந்து முன் வைத்தார் என்பதைப் பற்றி பேசினார்.

நான் இது குறித்த யோசனையில் ஆழ்ந்திருந்த போது,  அங்கேயே ஒரு சிறு வெளியீடு என் கையில் கொடுக்கப்பட்டது. ‘வளர்ச்சி நோக்கில் தமிழ்’ என்பதுதான் அந்த நூல்.

எனக்கு பெரிதும் வியப்பாகிவிட்டது. ஆசிரியர் அவர்கள் பேசிய விபரங்கள் அனைத்தும் நூலில் இருந்தது – எழுதி அச்சாக்கம் செய்து, கையோடு கொண்டு வந்திருக்கிறார்கள் கோலாலம்பூருக்கு.

ஆசிரியர்  அவர்கள்  எதைச் செய்தாலும்  உரிய தயாரிப்பு இல்லாமல்,  எந்த கூட்டத்திலும் பேச மாட்டார்கள்; எழுத மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். 

பேசத் தொடங்குவதற்கு முதலில் நெறி யமைந்த சிந்தனையும், தர்க்கப்பூர்வமான தகவல்களும் அவரை வழி நடத்திக் கொண்டேயிருக்கும். 

எந்தத் தயாரிப்பும் இல்லாமல்  ஞாபகத்தில் இருப்பதை வைத்து பேசும் பழக்கம் இன்று கூடுதலாகி விட்டது. 

சில நேரங்களில் என்ன பேசுகிறார்கள் என்பது பேசுபவர்களுக்கே தெரிவதில்லை. ஆசிரியர் அவர்களின் சமூகப்பொறுப்புணர்வு கொண்ட இந்த அணுகுமுறையை இன்றைய தலைமுறை இளையத் தலைவர்கள் பின்பற்ற வேண்டும்  என்ற என்னுடைய விருப்பத்தை, நான் பகிர்ந்து கொள்கிறேன்.

கொள்கையும், கொள்கையாளர்களின் உறுதிப் பாடும் தலைமுறை தலைமுறையாக வளர்க்கப்பட வேண்டியவை. 

தந்தை பெரியருக்கு பின், ஆசிரியர் அவர் கள் முன்னெடுத்து வளர்த்து வருகிறார்கள்.  

நாடாளுமன்ற அரசியல், இன்றைய தலை முறைக்கு அரசியலில் கொள்கை நெருக் கடியை உருவாக்கி வருகிறது. 90 வயதிலும் மாற்று அரசியலுக்கான உறுதி மிக்க சித்தாந்தம் சார்ந்த நெம்புகோலாக திகழும் ஆசிரியர் அவர்களின் கொள்கை அரசியலை இன்றைய இளைஞர்கள் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இது தான் இன்றைய மக்கள் அரசியல்.

‘அறிவு பற்றிய தமிழரின் அறிவு’ என்று நான் எழுதிய நூலை ஆசிரியரிடம் மாநாட் டில் அறையில் சந்தித்துக் கொடுத்தேன். 

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் இளைய தலைமுறை தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், தமிழ் ஆய்வறிஞர் தஞ்சை மணிமாறன் இருவரும் உடன் இருந்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *