மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க சென்னையில் 1727 முகாம்கள்

Viduthalai
3 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 25 – கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு சென்னையில் 1727 முகாம்களில் தொடங்கியது. 

மகளிர் உரிமை தொகைக்கு தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்பப் படி வங்கள் நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக வழங்கப்பட்டது. இந்த விண்ணப் பங்களை பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் தொடங்கியது. 

சென்னை மாநகராட்சியில் 3 கட்டங்களாக இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. மாநகராட்சி எல்லைக்குள் 1,428 நியாய விலைக் கடைகள் இருக்கின்றன. 10 லட்சத் துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். 

இதில் கடந்த 23ஆம் தேதி வரையில் 5 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் வினியோ கிக்கப்பட்டு உள்ளன.

முதல்கட்டமாக 703 நியாய விலைக் கடைகளில் உள்ள அட் டைதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண் ணப்பப் பதிவு 1,727 முகாம்களில் நேற்று (24.7.2023) தொடங்கியது. 

இந்த முகாமில் இல்லத்தரசிகள் ஆர்வத்துடன் பங்கேற்று விண் ணப்பத்தை பதிவு செய்தனர். ‘டோக் கன்’ அடிப்படையில் ஒரு முகாமில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில் 30 பேரின் விண் ணப்பப் படிவங்களும், மதி யம் 2 மணி முதல் 5.30 மணி வரை யில் 30 பேரின் விண்ணப்பப் படிவங் களும் பதிவு செய்யப் பட்டன.

 500 அட்டைதாரர்களுக்கு ஒரு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இப்பணியில் சிறப்பு கவனத்துடன் ஈடுபட்டு உள்ளனர்.

விண்ணப்பங்களை பதிவு செய் வதற்காக அலைபேசி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் ‘பயோ மெட்ரிக்’ முறையில் விண் ணப்ப விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை, ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரி பார்ப்பதற்காக ஒவ்வொரு முகாம் களிலும் உதவி தன்னார்வலர்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பெண்கள் கொண்டு வரும் ஆதார் அடையாள அட்டை எண், ஸ்மார்ட் கார்டு எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை சரி பார்த்த பின்னர்தான் முறைபடி பெயர் பதிவு செய்யப்படுகிறது. விண்ணப்பங்கள் பதிவு செய்யப் பட்டு உள்ளதா? என்பதை அறிந் துக்கொள்ளும் வகையில் ஸ்மார்ட் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு உடனடி யாக குறுந்தகவல் அனுப்பப் படுகிறது.

‘பயோ மெட்ரிக்’கில் கை ரேகை பதியவில்லை என்றால் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு ஓ.டி.பி. எண் அனுப்பி அதன் மூலமாகவும் விண்ணப்பப் பதிவு நடைபெறு கிறது. ‘சர்வர்’ பிரச்சினை ஏற்படும் சமயத்தில், கைப்பட ஆவணங் களை பதிவு செய்து பின்னர் இணையத்தில் பதிவேற்றம் செய் யும் வசதியும் செய்யப்பட்டு உள் ளது.

சில நியாய விலைக் கடைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அட் டைதாரர்கள் உள்ளனர். எனவே இந்த நியாய விலைக் கடைகளில் உள்ள அட்டைதாரர்களின் விண் ணப்பங்களை பதிவு செய்யும் பணியில் 4 தன்னார்வலர்கள் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர்.

இதே போன்று 1,500 அட்டை தாரர்கள் உள்ள நியாய விலைக் கடைகளின் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 3 தன்னார்வலர் களும், 1,000 அட்டைதாரர்கள் உள்ள கடைகளுக்கு 2 தன்னார் வலர்களும் நியமிக்கப்பட்டு இருக் கின்றனர். சென்னையில் நேற்று (24.7.2023) தொடங்கிய முதல் கட்ட முகாம் ஆகஸ்டு 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

2ஆம் கட்டமாக 725 நியாய விலைக் கடைகளில் உள்ள அட் டைதாரர்களுக்கு ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முகாம் நடக்கிறது. இந்த 2 முகாம் களிலும் விடுபட்ட நபர்களுக்கு 17ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையில் சிறப்பு முகாம்கள் நடை பெற உள்ளது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளிலும் முகாம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கான 2,266 ‘பயோ மெட்ரிக்’ கருவி வழங்கப் பட்டு உள்ளது.

சென்னையில் இப்பணிகளை கண்காணிக்க மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக் கப்பட்டு உள்ளனர். மேலும் இப் பணிக்காக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *