குடந்தை (கழக) மாவட்டம், பட்டீசுவரம், பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் துணைவியார் அ.சவுந்தரவள்ளி அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (23.11.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000 அவர்களின் குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.
மண்ணச்சநல்லூர், காந்திநகர் எட்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி (ஆசிரியர் ஓய்வு) அவரின் துணைவியார் திருமதி செல்வமணி ஆகியோரின் 56ஆவது மண நாள் (22.11.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கியுள்ளனர். நன்றி! வாழ்த்துகள்!!
விருதுநகர் மாவட்டம், திருமதி. த. சாந்தா, தனது 29ஆம் ஆண்டு பணி தொடக்க நாள் மகிழ்வாக (21.11.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடையாக வழங்கினார்.