மணிப்பூர்: நாடெங்கும் எரிமலை வெடிப்பு ஜூலை 31இல் தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் கண்டனஆர்ப்பாட்டம்

2 Min Read

சென்னை, ஜூலை 26 – மணிப்பூரில் பழங்குடி பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து ஜூலை 31 அன்று அனைத்து மலைப் பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத் தலைவரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினரு மான பி.டில்லிபாபு மற்றும் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,”மணிப்பூர் மாநிலத்தில் பாஜக – ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்பு களின் தூண்டுதலால் அப்பாவி குக்கி  ஜோமி, நாகா பழங்குடி இன மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

இத்தகைய கொடூரமான வன் முறையில் ஈடுபட்ட ஒரு கும்பல் இரண்டு பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற காட்சிப் பார்ப் போரை பதற வைக்கிறது. இக்கொடூர அக்கிரமத்தை தட்டிக் கேட்ட இளம் பெண்ணின் தந்தை, சகோதர னையும் பாசிசக்  கும்பல் அடித்துக் கொன்றுள்ளது.

மேலும் பைரேன்சிங் தலைமையிலான ஆளும் பாஜக அரசு இச்சம் பவத்தினை மூடி மறைத்திட முயற் சித்ததுடன் அல்லாமல், மாநில காவல் துறையினரே இக்கொடூர சம்பவத்திற்கு துணை போயுள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசும், பிரச்சினையை அமைதிப் படுத்த முயற்சிக்கவில்லை. மலை களில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த் திட  எரியும் தீயில் எண்ணெய் ஊற் றுவது  போல் அவர்களின் நட வடிக்கை உள்ளது.

200-க்கும் மேற்பட்ட சர்ச்சுகளை இடித்தும், வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தியதோடும் அல் லாமல், விளைநிலங்களையும் அழித் துள்ளனர். பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது  மட்டுமல் லாமல், மேலும் இரண்டு பழங்குடி பெண்களை கும்பல் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக் கொலை  செய்த சம்பவம் திடுக்கிட வைக்கிறது.

தினமும் மணிப்பூரில் பழங்குடி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற் பட்டு வருகின்றன. இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்திடாத மாநில முதலமைச்சர் பதவி விலகிட கோரியும், நிர்வாணப்படுத்தி கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைத்து காட்டுமிராண்டிகளையும் கைது செய்து கடும் தண் டனை வழங்கிட கோரியும் தமிழ்நாட்டின் அனைத்து மலைப் பகுதிகளில் ஜூலை 31 அன்று கண் டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என   தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *