நமது நாட்டில் இப்போது தொழி லாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழிலாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தாம். தொழிலாளி என்பவன் – நாட்டின் நன்மைக்காக ஒரு தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும்படியான முறையில் தொழில் செய்பவன்தான் தொழிலாளி.
(‘குடிஅரசு’ 30.5.1926)