அகமதாபாத், நவ.19, குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவா் உயிரிழந்த விவகாரத்தில், 15 மூத்த மருத்துவ மாணவா்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனா். குற்றம் சாட்டப்பட்ட மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஜிஎம்இஆா்எஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மருத்துவக் கல்லூரி முதல்வா் ஹா்திக் ஷா கூறியதாவது: 16.11.2024 அன்று இரவு முதலாம் ஆண்டு மருத்துவ மாணவா் அனில் மெத்தானியாவை மூன்று மணி நேரம் நிற்க வைத்து 2-ஆம் ஆண்டு மாணவா்கள் துன்புறுத்தியதில் அவா் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.மருத்துவா் ஷா தலைமையில் ராகிங் எதிர்ப்புக் குழுவினா், முதலாம் ஆண்டு மாணவா்கள் 11 பேரிடமும், 2-ஆம் ஆண்டு மாணவா்கள் 15 பேரிடமும் வாக்குமூலம் பெற்றனா். அதில் முதலாம் ஆண்டு மாணவா்களை ராகிங் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.இதுகுறித்து பலிசானா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் அவலம் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவா் உயிரிழப்பு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books