கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசியலின் திசை மாறிவிட்டதாக பிரியங்கா கூறியுள்ளார். மக்களுக்கான ஆட்சி என்பது இல்லாமல் போய் விட்டதாகக் குறைகூறிய அவர், மக்களை பிளவுப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறவே பாஜக விரும்புவதாகவும் குற்றஞ்சாட்டினார். விமான நிலையம், துறைமுகம் என நாட்டின் பெரும்பாலான சொத்துகள் அதானி, அம்பானி வசமே உள்ளதாகவும், இருவருக்காகவே மோடி உழைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.