வருமான வரி செலுத்துவோருக்கு அய்.டி. (IT) அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. அதில், வெளிநாட்டில் சொத்து வைத்திருந்தாலோ (அ) வெளிநாட்டில் இருந்து வருமானம் பெற்றாலோ (அ) வங்கிக் கணக்கு வைத்திருந்தாலோ அதுகுறித்த விவரத்தை வருமான வரி கணக்குத் தாக்கலில் குறிப்பிட வேண்டும் எனக் கூறியுள்ளது. 2024-2025ஆம் ஆண்டிற்கான தாமதமான மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை டிச.31க்குள் தாக்கல் செய்யவும் அய்.டி. (IT) வலியுறுத்தியுள்ளது.