கும்மிடிப்பூண்டி, நவ.18- கும்மிடிப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர்கள் கலந்தாய்வு கூட்டம். பொன்னேரி திமுக அலுவலகத்தில் 2024 நவம்பர் 16 ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் டார்வி வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ந.ஜனாதிபதி தலைமையில் பகுத்தறிவாளர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் நோக்கம் குறித்தும், பகுத்தறிவாளர் கழக ஆசிரியர்கள் எந்த முறையில் செயல்பட வேண்டும், பள்ளியில் மாணவர்களை எவ்வாறு பகுத்தறிவு படுத்தவேண்டும் என்கின்ற கருத்துகளை தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் விளக்க உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து இந்திய பகுத்தறிவாளர் கழகசங் கத்தின் கூட்டமைப்பு நடத்தும் 13 ஆவது மாநாடு திருச்சியில் அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. பெரியார் மண்ணில் இது நடைபெறுகின்ற காரணத்தால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வகையில் சிறப்பான முறையில் நடத்தவேண்டும்.
அதற்கு கும்மிடிப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக நிதி தருதல் குறித்தும், ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ பத்திரிகைக்கு சந்தாவாக ரூ.900 ரூபாய் செலுத்துவது குறித்தும், இம்மாவட்டத்திலிருந்து பெரு வாரியானவர்கள் பங்கேற்பது குறித்தும் விளக்கமாக தெளிவாகவும், தான் பகுத்தறிவாளர் கழக அனுபவங்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்த நாள் சென்னையில் நடைபெறுகின்ற விழா குறித்தும் பகுத்தறி வாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் கருத்துரையை சிறப்பாக முன் வைத்தார்.
வந்திருந்த தோழர்களும், ஆசிரியர் தோழர்கள் தங்களுடைய கருத்துகளை மாநாடு குறித்தும் வாழ்க்கை அனுபவத்தின் பகுத்தறிவு சார்ந்தும் ஒவ்வொருவராக பேசினார்கள்.
நிறைவாக பொன்னேரி வினோத் நன்றி யுரை கூறினார்.
தாஸ், திருமுருகன், லிங்க செல்வி, செல்வி, பொன்னேரி நகரத் தலைவர் அருள், மீஞ்சூர் ஒன்றிய தலைவர் முருகன், புழல் ஒன்றிய செயலாளர் உதயகுமார், சோ.பாலு, நடத்துநர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் 12.30 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.