18.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அமலாக்கத்துறை, சி.பி.அய். கெடுபிடியால், டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பதவி விலகியுள்ளார், ஆம் ஆத்மி குற்றச்சாட்டு.
* மக்கள் கொண்டாடும் திராவிட மாடல் ஆட்சி: 2026 – மீண்டும். கள ஆய்வு குறித்து தொண்டர் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* தொழிலதிபர் அதானி மட்டுமே, மோடி ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கிறார். விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை, பிரியங்கா தாக்கு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மணிப்பூர் தொடர்ந்து பற்றி எரிய வேண்டும் என பாஜக நினைக்கிறது – கார்கே கண்டனம்.
* தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் கோரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மதச் சமூகத்தைப் பற்றி “தவறான கதையை” பரப்புவதாக கூறப்படும் சமூக ஊடகங்களில் பாஜக வெளியிட்ட காட்சிப்பதிவுக்கு எதிராக கூட்டணி கட்சிகளான ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து எஃப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டது: ‘எவ்வளவு தூரம் இந்து-முஸ்லிம் என்ற பெயரில் நாட்டை வீழ்த்த அனுமதிப்பீர்கள்?’ என கேள்வி.
தி டெலிகிராப்:
* டில்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி பல்கலைக்கழகம், ஜேஎன்யு, ஜாமியா ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ’கிரிமிலேயர்’ கண்டறிய, அரசுப் பதவிகளுக்கு இணையான பொதுத்துறை பதவிகள் என பணியாளர் நலத் துறை அறிவித்தது, குறைபாடுகளைக் கொண்டுள்ளது. சரி செய்யப்பட வேண்டும் என ஓபிசி நாடாளுமன்ற குழு பரிந்துரைக்க முடிவு.
– குடந்தை கருணா