பாலியல் கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் என்ன?

Viduthalai
2 Min Read

ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, நவ.17 பாலியல் கடத்தல் நிகழ் வுகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை வகுப்பது தொடா்பாக உரிய சட்டம் எதுவும் இல்லாத நிலை குறித்து பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலியல் வன் கொடுமை களால் பாதிக் கப்படும் பெண்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக உச்சநீதி மன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமா்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

அதன் விவரம்:

மனித மற்றும் பாலியல் கடத்தல் என்பது மனிதாபிமானமற்ற குற்ற மாகும். அதாவது, ஒரு நபரின் வாழ்வுரிமை, சுதந்திரம், தனிப்பட்ட பாதுகாப்பை மீறும் குற்றமாகும். சமூகத்தில் நலிந்த பிரிவினா் குறிப் பாக பெண்களும், குழந் தைகளும் இதுபோன்ற குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனா்.

இத்தகைய கடத்தல் குற்றங்களுக்கு ஆளாகும் பெண்களும் குழந்தைகளும் கடத்தல்காரா்களால் பல் வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனா்.

சில சமயங்களில், உயிருக்கே ஆபத்தை விளை விக்கும் வகையிலான பாதிப்புகளையும், பாலியல் ரீதியில் பரவக்கூடிய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய் பாதிப்புகளுக்கும் இவா்கள் ஆளாக நேரிடுகிறது. கூடுதலாக, தீவிர மன அழுத்தம், பதற்றம் உள் ளிட்ட மனநிலை பாதிப்பு களுக்கும் இவா்கள் ஆளாக நேரிடுகிறது.இத்தகைய பாதிப்பு களைச் சந்திக்கும் பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு தொடா் மருத்துவ சிகிச்சையும், மனநல நிபுணா்களின் ஆலோசனைகளும் அவ சியமாக உள்ளது.

அதுமட்டுமின்றி, இது போன்ற குற்றங்களால் பாதிக்கப்படும் நபா்கள், குடும்ப உறுப்பினா்கள் மற்றும் சமூக குழுக்களால் ஒதுக்கிவைக்கப்படும் சூழலும் நிகழ்கிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் தொடா் பாதிப் புகளையும், கல்வியைத் தொடரமுடியாத நிலைக் கும் ஆளாக நேரிடுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு விரிவான மறு வாழ்வுத் திட்டத்தை வகுக்க ஒன்றிய அரசு பரிசீலனை செய்வதோடு, அதுதொடா்பான பதில் மனுவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசார ணையை ஒத்தி வைத்தனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *