9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க அறிவுறுத்தல்

2 Min Read

சென்னை, நவ.14 அரசுப் பள்ளி களில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி யுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: உயா்கல்வி வழிகாட்டித் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் உயா்கல்வி வழிகாட்டுதல் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கைக்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது பெரும்பாலான கல்லூரிகள் சோ்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் (இ-மெயில்) மூலமாகவே மாணவா்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருப்பது கட்டாயமாகிறது.

இதையடுத்து நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களும் மின்னஞ்சல் முகவரியை வகுப்பாசிரியா்கள் உதவியுடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மாணவா்களுக்கு மின்னஞ்சல் உருவாக்கப்பட்ட பின்னா் அதன் முகவரிகளை எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும். அதனுடன் மின்னஞ்சலை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து மாணவா்களுக்கு கற்பிக்க வேண்டும். இந்தப் பணிகளை அரசுப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாக டிச. 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். இது தொடா்பாக அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் பன்னாட்டு கொள்முதல் பொறியியல் கண்காட்சி

சென்னை, நவ.14 ‘இண்டர்நேஷனல் இன்ஜினியரிங் சோர்சிங் ஷோ’ என்று அறியப்படும் பன்னாட்டு பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் 12-ஆவது நிகழ்வு இம்மாதம் 27-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் (இஇபிசி) தலைவர் அருண் கரோடியா கூறியதாவது: பன்னாட்டு பொறியியல் கொள்முதல் கண்காட்சி நவம்பர் 27, 28 மற்றும் 29 தேதிகளில் சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மிகப்பெரிய அளவில் பங்களி்ப்பு செய்யும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. அதேபோல், மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்வதில் மூன்றாவது இடத்திலும், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் முதல் நிலையிலும் தமிழ்நாடு உள்ளது. இதனை உணர்ந்தே நடப்பாண்டில் இரண்டாவது முறையாக இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் டாடா ஸ்டீல், ஜாகுவர் லேண்ட் ரோவர், ஆர்சிலர் மிட்டல் / நிப்பான் ஸ்டீல், கோஸ்டல் கத்தார் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 40 நாடு களைச் சேர்ந்த 300 பங்கேற்பாளர்களும், 10,000-க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் மய்யங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெறும். இவ்வாறு அருண் கரோடியா தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *