பள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி, மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வெளியே அழைத்துச் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாணவ-மாணவிகள் பாலியல் புகார்களை தெரிவிக்க 14417, 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
யானைகளுடன் ஒன்றாக வசிக்கும் கிராம மக்கள் நமது ஊரில் காட்டு யானையைக் கண்டாலே மக்கள் தெறித்து ஓடுவது உண்டு. ஆனால், அசாமில் பழங்குடியினர் வசிக்கும் கோலகாட்டில் காட்டு யானைகள் கூட்டமாக வந்தாலும், மக்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையை செய்கின்றனர். யானையும் அவர்களை தாக்குவதில்லை, மக்களுக்கு எந்த பிரச்சினையும் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்ஏஎஸ் அதிகாரி ஒருவர் இந்த காட்சிப் பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.