11.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* உச்சநீதிமன்றத்தின் 51ஆம் தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கன்னா இன்று பதவி ஏற்றார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜாதிவாரி கணக் கெடுப்பு, 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கம் உள்ளிட்ட வாக்குறுதிகளை மகா விகாஸ் அகாதி கூட்டணி (காங்கிரஸ், சிவசேனா, சரத் என்.சி.பி.) அளித்துள்ளது.
* மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் தங்களை அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் சந்தித்து பேசியுள்ளார் என உச்ச நீதிமன்றத்தில் பொய்யான வாக்குமூலத்தை ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாக குக்கி இன சட்டமன்ற உறுப்பினர்கள் அறிக்கை.
* நாடாளுமன்றத்திலும் ஹிந்தித் திணிப்பு நடக்கிறது. ஹிந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக்க பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு முயற்சிக் கின்றனர் என மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராகுல் காந்தியின் கையில் இருப்பது அரசமைப்பு புத்தகம் இல்லை.அது வெற்றுப் புத்தகம் என விமர்சித்த பாஜக தலைவர்களுக்கு, கடந்த 2017ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு புத்தகத்தின் நகலை பிரதமர் மோடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கொடுத்தார். மோடியை மீண்டும் தொடக்கப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என மல்லிகார்ஜூனா கார்கே காட்டம்.
* ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை மாநிலக் கல்விக் கொள்கைக்கு எதிரானது. 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதையும் நாங்கள் எதிர்க்கிறோம். டில்லியில் இருந்து நிதியைப் பெறுவதற்கு தமிழ்நாடு தனது கல்விக் கொள்கையில் எந்த வகையிலும் சமரசம் செய்யாது என பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி உறுதி
டைம்ஸ் ஆப் இந்தியா:
* செப்டம்பரில் லெபனானில் 39 பேரைக் கொன்ற லெபனான் பேஜர் தாக்குதல்களை தன்னுடைய உத்தரவின்பேரில் தான் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல்.
* மொத்தம் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் உள்ள, 1,114 நீதிபதி பதவிகளில் 32 சதவீதம் அதாவது 353 நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது. அலகாபாத் நீதிமன்றத்தில் 49 சதவீத பதவிகள் நிரப்பப்படாமல் முதலிடத்தில் உள்ளது. தென் மாநிலங்களில் பதவிகள் நிரப்பப்பட்டு, மிகக் குறைந்த சதவீத பதவிகளே நிரப்பப்படாமல் உள்ளது.
– குடந்தை கருணா