ஹிந்தி திணிப்புக்கு எதிரான எதிர்ப்பு மனப்பான்மை நாடு முழுவதும் பரவலாக வெளிப்பட்டு வருகிறது. மகாராட்டிராவில், ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் இணையர்கள் மராத்தி மொழியில் பேசியதற்கு, இந்தியாவில் இருப்பவர்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என கூறி, அவர்களை மன்னிப்பு கடிதமும் எழுத வைத்துள்ளார். இச்செய்தி இணையத்தில் வெளியாகி, கடும் எதிர்ப்பு வெடித்தது.அதனைத் தொடர்ந்து, மேற்கு ரயில்வே அந்த பயணச்சீட்டு பரிசோதகரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.