முப்பெரும் நிகழ்ச்சிகள் – அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
விளாத்திக்குளம், நவ. 16- 10.11.2023 அன்று மாலை தூத்துக்குடி மாவட் டம், விளாத்திகுளம் ஒன்றியம், மேல்மாந்தையில் அறிவாசான் தந்தை பெரியார் சிலை, அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு, சுயமரி யாதைச் சுடரொளி பெ.காலாடி படத்திறப்பு எழுச்சியோடு நடை பெற்றது. மாவட்டத்தலைவர் மு. முனியசாமி தலைமை வகித்தார் ,காப்பாளர் சு.காசி வரவேற்று உரையாற்றினார்.
விழாவை துவக்கி வைத்து காப்பாளர் மா.பால்ராசேந்திரம் தந்தை பெரியாரின் அருந்தொண் டால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை, ஏற்றத்தை விளக்கி உரையாற்றி னார்.
அறிவாசான் தந்தைபெரியார் சிலையை சமூகநலன், மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து தந்தை பெரியாரின் பேருழைப்பால் பெண் கள் பெற்றுள்ள உயர்வுகளை, உரி மைகளை எடுத்துரைத்தார். தமி ழர் தலைவர் ஆசிரியர் அய்யாவின் உழைப்பாலும், வகுத்தளித்த திட் டங்களாலும் தமிழ்நாடு முதல மைச்சர் இந்தியாவிற்கே எடுத்துக் காட்டான ஆட்சியை நடத்தி வரு கிறார் என பெருமையுடன் சிறப் புரையாற்றினார்.
அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து விளாத் திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், சுயமரியாதைச் சுடரொளி பெ.காலாடி படம் பதித்த கல்வெட்டைத் திறந்து வைத்து ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா உரையாற்றினார்கள்.
கழகப்பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், அறிவாசான் தந்தைபெரியார், அண்ணல் அம் பேத்கர் ஆகியோரின் தொண்டால் விளைந்த பயன்களையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேச்சும், எழுத்தும் தமிழ்நாடு ஆட்சியை வழிநடத்துகிறது. டிசம்பர் 2இல் 91 ஆவது பிறந்தநாள் காணும் தமிழர் தலைவர் காட்டும் திசைநோக்கி பயணிப்போம்! ஒன்றிய பிஜேபி அரசை அகற்றிட உறுதியேற்போம் என உரையாற் றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் இணைப்புரையாற்றினார்
மாவட்டச்செயலாளர் கோ.முருகன் கழகக்கொடியேற்றி வைத் தார்.
மேல்மாந்தை முருகன் நன்றி கூறினார்.
தலைமைக்கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம், திருநெல் வேலி மாவட்ட கழகக் காப்பாளர் இரா.காசி மாவட்டத்தலைவர், ச.இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
விளாத்திகுளம் ஒன்றியத் தலை வர் பாலமுருகன்,ஒன்றிய செயலா ளர் நாகராசன் ஆகியோர் ஒருங் கிணைத்து விழாவை சிறப்பாக நடத்தினார்கள். சுயமரியாதைச் சுடரொளி பெ.காலாடி மகன் மற் றும் பழனிச்சாமி மகன் உள்ளிட்ட விழாக் குழுவினருக்கு காப்பாளர் சு.காசி பயனாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.