மும்பை, நவ.7 மகாராட்டிராவில் ஆளும் கூட்டணி அரசையே மிஞ்சும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாடி கூட்டணி பெண்களுக்கு மாதம் ரூ.3000 வழங்குவது உள்ளிட்ட அய்ந்து வாக்குறுதிகளை அளித்துள்ளது.
288 சட்டமன்ற தொகுதிகளுடைய இங்கு, நவ., 20இல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; நவ., 23இல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த தேர்தலில் ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா – காங்., – சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் அய்ந்து வாக்குறுதிகளை அளித்து உள்ளது.
1. மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 அளிக்கப்படும். மற்றும் மஹாலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் .
2. கிருஷி சம்ருத்தி யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகள் பயிர்க் கடன் ரூ. 3 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். முறையாக கடனை திருப்பிச் செலுத்தியர்களுக்கு ஊக்கத் தொகையாக 50,000 ரூபாய் வழங்கப் படும்.
3. ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்க பாடுபடுவது.
4. ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச மருத்துவம் வழங்கப்படும்.
5. வேலையில்லாத இளைஞர் களுக்கு மாதம் ரூ.4,000உதவித்தொகை. என அறிவித்து உள்ளது.
தொடர்ந்து ராகுல் பேசுகையில், இது சித்தாந்தத்தின் போர், ஒருபுறம் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளது, மறுபுறம் இந்தியா கூட்டணி உள்ளது, ஒருபுறம், அம்பேத்கரின் அரசமைப்பு, சமத்துவம் உள்ளது. மற்றும் அன்பு மற்றும் மரியாதையும் இருக்கிறது. மறுபுறம், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை அரசமைப்பை ஒழிக்க முயற்சிக்கின்றன.
பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இவ்வாறு ராகுல் பேசினார்.