நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ஆம் தேதி தொடக்கம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படுமாம்!

viduthalai
3 Min Read

புதுடில்லி,நவ.6- நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் 25-ஆம் தேதி தொடங்குகிறது, டிசம்பர் 20-ஆம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடப் பது வழக்கம். அந்தவகையில், குளிர்கால கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை ஒன்றிய அரசு நேற்று (5.11.2024) வெளியிட்டது.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய அரசின் பரிந்து ரையை ஏற்று, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக் காக இரு அவைகளையும் கூட்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதிவரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. நாடாளுமன்ற அலுவல்க ளின் அவசர தேவையை பொறுத்து, நிறைவடையும் தேதியில் மாற்றம் இருக்கலாம்.

நவம்பர் 26-ஆம் தேதி, அரசியல் சாசன நாள் ஆகும். அர சியல் சாசனம் ஏற்கப்பட்ட தன் 75-ஆவது ஆண்டு விழா அன்று கொண்டாடப்படுகிறது.

அதை முன்னிட்டு, பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மய்ய மண்டபத்தில் இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் அரசியல் சாசன தின கொண்டாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகள்

மராட்டியம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க உள் ளன. தேர்தல் முடிவுகள் 23-ஆம் தேதி வெளியாகின்றன. எனவே, நாடாளுமன்றம் கூடும்போது, 2 மாநிலங்களிலும் எந்தெந்த கட்சிகள் ஆட் சியை பிடித்தன என்று தெரிந் துவிடும்.

இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற கூட்டத்தொட ரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா போட்டியிடும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களின் முடிவுகளும்

23-ஆம் தேதி வெளியாகின்றன. எனவே, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதி கள் நடத்தி வரும் தாக்குதல் கள், கனடாவில் இந்து கோவில் மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங் கள், மணிப்பூர் கலவரம், வேலையில்லா திண்டாட்டம்.பொருளாதார நிலவரம் போன்ற பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.

மேலும், இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப் படும் என்று எதிர்பார்க்கப்படு கின்றது. அவற்றில் மிகவும் முக் கியமானது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா ஆகும்.
பிரதமர் மோடி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல் படுத்துவதை நோக்கி செயல்பட்டு வருகிறோம் என்று சமீபத்தில் கூறினார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இத்திட்டம் வழிவகுக்கிறது.

“இதற்காக அரசியல் சாச னத்தில் திருத்தம் செய்வதற் கான மசோதா, நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப்படும். என்று தெரிகிறது.

இன்னொரு முக்கியமான மசோதா, வக்பு சட்ட திருத்த மசோதா ஆகும். கடந்த கூட்டத் தொடரில் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டது. நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத் தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அதை நிறை வேற்ற ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது.
வக்பு மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட் டுக்குழு கூட்டத்திலேயே ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சி எம்.பி.க்களிடையே மோதல் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்திலும் மோதல் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, இந்த கூட்டத்தொடர் பெரும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *