மன்னை, நவ.6- மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் 3.11.2024 காலை 10.30 மணி அளவில் சிறப்புடன் நடைபெற்றது.
ப.க. மாவட்ட இணைச் செயலாளர் இரா.கோபால் வரவேற்புரையாற்றினார். ப.க. மாவட்டத் தலைவர் வை.கவுதமன் தலைமை வகித்தார். தி.க. மாவட்டத்தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், கழக மாவட்ட அமைப்பாளர். ஆர்.எஸ்.அன்பழகன் ப.க. மாவட்ட அமைப்பாளர். த.வீரமணி, மாவட்டக் கழக துணை செயலாளர். வீ.புட்பநாதன் ப.க. மன்னை நகரச் செயலாளர் கோ.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ப.க.மாநில அமைப்பாளர் சி.இரமேஷ் FIRA அமைப்பின் மூலம் திருச்சியில் டிசம்பர் 28, 29, ஆகிய நாள்களில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டிற்கு அதிகமான பேராளர்களைப் பங்கேற்க செய்யவேண்டும், தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவிப்பின் மூலம் நடைபெறுகிறது இம்மாநாடு உலக நாடுகளில் இருந்தும், இந்திய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான நாத்திகர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர், அதற்கான பொருட் செலவு அதிகம். எனவே இம்மாநாட்டிற்கு மன்னை மாவட்டத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட நிதியைக் குறைவின்றி வழங்க வேண்டும் என்று தொடக்கவுரையாற்றினார்.
ப.க. மாநில பொதுச் செயலாளர் வி.மோகன் மாநாட்டின் நோக்கம் குறித்தும், பேராளர் நிதியின் அவசியம், மாநாட்டின் செலவினம், நன்கொடை மற்றும் மாநாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும் சிறப்புடன் நோக்கவுரை ஆற்றி னார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பகுத்தறிவாளர் கழக கோட்டூர் ஒன்றிய செயலாளர் கா.சுருளிராஜன், ப.க.கோட்டூர் ஒன்றிய அமைப்பாளர் ஆ.சுரேஷ், மாணவரணி மன்னை மாவட்ட செயலாளர் பா. சாருகான், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் தங்க.வீரமணி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசிரியர் காமராஜ், பகுத்தறிவாளர் கழக மன்னை நகரச்செயலாளர் பேராசிரியர் இரா.காமராஜ், மன்னார்குடி வே.அழகேசன், திராவிடர்கழக மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், திராவிடர்கழக மன்னார்குடி ஒன்றியத்தலைவர் மு.தமிழ்ச்செல்வன்,கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், வழக்குரைஞர் சிங்காரவேலு, திராவிடர் கழக தோழர் கே.ரத்தினவேலு, பகுத்தறிவாளர் கழக கோட்டூர் ஒன்றியத்தலைவர் சி.ராமலிங்கம், சிறுகளத்தூர் என்.கலைச்செல்வம், கழக இளைஞரணி நீடாமங்கலம் நகரத் தலைவர் இரா.அய்யப்பன், கழக கோட்டூர் ஒன்றிய தலைவர் எம்.பி.குமார், கழக இளைஞரணி தோழர் மா.மணிகண்டன், பகுத்தறிவாளர் கழக தோழர் பழ.முருகராஜ், பகுத்தறிவாளர் கழகத் தோழர் ர.ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக தோழர் ச.அறிவானந்தம், பகுத்தறி வாளர் கழக தோழர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.காமராஜ், பேராசிரியர் திராவிடர் கழக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சதா.அய்யப்பன், இளைஞர் அணி தோழர் ஒக்கூர். தெ.ரூபன், மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இறுதியில் ப.க. நகரத் தலைவர்.கோவி.அழகிரி நன்றி கூறினார்.
கூட்டத்தில், பகுத்தறிவு கருத்துக்களைத் தொடர்ந்து பரப்புகின்ற வகையில் மன்னார்குடி நகரத்திலும் நீடாமங்கலம் நகரத்திலும் ‘‘பெரியார் பேசுகிறார்’’ தொடர் சொற்பொழிவு மாதாந்திர கருத்தரங்க கூட்டத்தினை தொடங்கி நடத்துவது எனவும்,
FlRA என்ற உலக நாத்திகர் கூட்ட மைப்பின் சார்பில் டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டிற்கு மன்னார்குடி மாவட்டத்திலிருந்து ஏராளமான தோழர்களைப்பேராளர்களாக பங்கேற்க செய்வது எனவும் மாநாட்டிற்கு உரிய நன்கொடையினை மன்னார்குடி மாவட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிதியினை முழுவதுமாக வசூல் செய்து வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்.
1) பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் தங்க.வீரமணி.
2) பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா. கோபால்.
3) பகுத்தறிவாளர் கழக மாவட்ட இணைச்செயலாளர் ச.அறிவானந்தம்.
மாநாட்டிற்குரிய வசூல் குழு:
தலைவர்: தங்க.வீரமணி
உறுப்பினர்கள்: 1) வை.கவுதமன் 2) கோவி.அழகிரி 3) நா.உ.கல்யாணசுந்தரம், 4) இரா.கோபால் 5) சு. அறிவானந்தம் 6) சி.இரமேஷ் 7) நா. இரவிச்சந்திரன் 8) க.முரளி 9) சதா. அய்யப்பன் 10) இரா.அய்யப்பன் 11) வி.புட் பநாதன் 12) எம்.பி.குமார் 13) சி.ராமலிங்கம்
கலந்துரையாடல் நடந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட நன்கொடைகள்.
1) வை.கவுதமன் ரூ.2000
2) மு.தமிழ்ச்செல்வம் ரூ.1000
3) இராம.அன்பழகன் ரூ.1000
4) சு.சிங்காரவேல் ரூ.1000
5) கெ.ரத்தினவேல் ரூ.1000
6) கா.சுருளிராஜன் ரூ.1000
7) பழ.முருகராஜ் ரூ.1000
8) தங்க.வீரமணி ரூ.1000
9) வே.அழகேசன் ரூ.1000
10) பேரா.காமராஜ் ரூ.1000
11) வி.புட்ப நாதன் ரூ.1000
12) எம்.பி.குwமார் ரூ.1000
13) ஆ.சுரேஷ் ரூ.500
14) ஒரத்தூர்.காமராஜ் ரூ.1000
ஆகமொத்தம் ரூ.14,500