புதுடில்லி, நவ.3- காற்று மாசுபாடு மோசமான அளவில் இருப்பதால், டில்லியில், பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், தீபாவளியன்று இரவு, ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் தீக்காயத் துடன் குவிந்ததன் மூலம், தடை உத்தரவு எந்த அளவில் மீறப்பட்டது என்பது தெளிவானது.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 48 பேர் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றனர். இவர்களில் 27 பேர் படுகாயத்துடன் மருத்துவ மனைக்கு வந்தனர். இவர்களில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 31.11.2024 அன்று ஒரே நாளில் சப்தர் ஜங் மருத்துவமனையில் மட்டும் 117 பேர் பட்டாசு வெடித்த போது நேரிட்ட தீக்காயங் களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 89 பேர் டில்லியைச் சேர்ந்தவர்கள். தீக்காயத்துடன் மருத்துவமனைக்கு வந்தவர்களில் சுமார் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளிக்கு முந்தைய நாள் களிலும், பட்டாசு வெடித்ததால் நேரிட்ட தீக்காயங்களுடன் ஏராளமானோர் மருத்துவமனை களுக்கு வந்ததாகவும், சின்ன சின்ன தீக்காயங்களுக்கு மருத்துவ மய்யங்களிலேயே பலரும் சிகிச்சை பெற்று சென்றதாகவும் கூறப்படுகிறது.
பட்டாசு விற்பனை செய்ய, வெடிக்க தடை விதிக்கப் பட்ட டில்லியில் இவ்வாறு நூற்றுக் கணக்கானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்தது, அங்கு எந்த அளவில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.