வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு!
சென்னை, நவ.3- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளது என்றும், வங்கக்கடலில் வருகிற 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மய்யம் அறிவித் துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15ஆம் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், கிழக்கு திசை காற்று முழுமை யாக தென் இந்திய பகுதி களில் பரவி பருவமழை முழு வதுமாக தொடங்க உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் 5ஆம் தேதி அதிகாலையில் இருந்தே மழைக்கான வாய்ப்பு தொடங்கிவிடும் என்றே சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகதென் இந்திய பகுதிகளில் சில இடங் களில் மழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில் பருவமழை யின் தீவிரத்தை காட்டும் வகையில் வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மய்யம் அறிவித்திருக்கிறது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி
அந்தவகையில் தெற்குவங் கக்கடலில் வருகிற 7 அல்லது 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று வட தமிழ்நாட்டின் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் கடலோர ஆந்திரா, ராயல்சீமா, கேரளா உள்ளிட்ட தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவித்திருக்கிறது.
அதாவது இயல்பைவிட 23 சதவீதம் அதிகமாக மழை பொழிவு இருக்கும் என சொல்லப்பட்டு உள்ளது. இதில் நவம்பர் முதல் வாரத்தில் இயல்புக்கு குறைவாகவும், 2ஆவது வாரத்தில் இயல்பைவிட அதிகமாகவும் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.